Ads
என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் உள்ள படிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, சோபியன் என்கவுன் டர் நடைபெறும் இடத்திற்கு சென்ற போது வாகனம் கவிழ்ந்து விழுந்ததில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Info
Ads
Latest News
Ads