கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை
இந்தியாவைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் கனடாவில் தங்கி செனேகா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். 21 வயதே ஆன கார்த்திக் பகுதி நேரமாக பணி செய்துகொண்டே படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ( ஏப்ரல் 7) டொராண்டோ செயிண்ட் ஜோசப் டவுனில் உள்ள டிடிசி ரயில் நிலையம் முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் துப்பக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் கார்த்திக் வாசுதேவ் குண்டு பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை.. வெளியுறவுத் துறை அமைச்சர் இரங்கல்..
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கனடா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனடாவில் உயிரிழந்த கார்த்திக் வாசுதேவுக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், “இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்