Ads
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை நிதித்துறை சார்பு செயலாளர் கோவிந்தராஜன் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளார்.
இதன் காரணமாக புதுவை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படியானது 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1-ம்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads