Ads
ஆந்திரா அமைச்சரவை ராஜினாமா
ஆந்திராவில், முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சி அமைத்து, அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன.
இந்நிலையில், வரும் 11ம் தேதி, அமைச்சரவையை மாற்றியமைக்க, ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதில், புது முகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்கவும், அவர் முடிவு செய்துள்ளார். ஐந்து துணை முதல் மந்திரிகள் நியமிக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு வசதியாக, தற்போது மந்திரிகளாக உள்ள 24 பேரும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் 24 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
Attachments
Info
Ads
Latest News
Ads