Ads
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,25,775 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,21,181 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,24,90,922 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 13,672 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads