உலகம் அழியப்போவதாக எண்ணிய கனேடியர்
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கம்லூப்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரட் ஹெய்ன்ஸ் (வயது 45). நகரில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கூட்டம் ஒன்றிற்கு சொந்தமானது என கருதப்பட்ட சேமிப்புக் கிடங்கு ஒன்றை பொலிசார் சோதனையிட முயன்றுள்ளார்கள். அப்போது அங்கு பிரட் ஹெய்ன்ஸ் வந்திருக்கிறார். அந்த கிடங்குக்குள் பலவகை துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகள், வெடி பொருட்கள் முதலானவை இருந்துள்ளன.
ஆயுதங்கள் வைத்திருக்க பிரட் ஹெய்ன்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கிடங்கு ஒன்றில் இவ்வளவு ஆயுதங்களை சேமித்து வைத்திருந்ததால் பொலிசார் அவரைக் கைது செய்தார்கள்.
பிரட் ஹெய்ன்ஸ் இன் சட்டத்தரணியோ, தனது கட்சிக்காரருக்கு கொஞ்சம் மன நலப் பிரச்சினை உள்ளது என்றும், ஆயுதங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட அவர், உலகம் அழியும்போது காட்டுக்குச் சென்று அங்கிருக்கும் ஒரு பாழடைந்த வீடு ஒன்றில் தங்கிக்கொள்ளும் நோக்கில் ஆயுதங்களை சேகரித்துவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பிரட் ஹெய்ன்ஸ் கொரோனா காரணமாக உலகம் அழியப்போகிறது என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் போதைப்பொருள் வேறு உட்கொள்வதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கற்பனை செய்துகொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பிரட் ஹெய்ன்ஸ்க்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.