தேசிய கீதத்தை அவமதித்த விவகாரம்: மம்தா பானர்ஜி ஆஜராக உத்தரவு
மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. ஆனால், அவர் தேசிய கீதம் ஒலிபரப்பான பின்பும் உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார். சில வினாடிகள் கழித்து தான் எழுந்து நின்றுள்ளார். பாதி வரிகள் மட்டுமே பாடிய அவர் அதன்பின் பாடாமல் நிறுத்தியுள்ளார்.
முதல் மந்திரி பதவி வகிக்கும் மம்தா தேசிய கீதத்தை அவமதித்துள்ளார். மேற்கு வங்காளத்தின் கலாச்சாரம், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் இந்திய தேசத்தை அவர் அவமதித்து உள்ளார்” என்று பா.ஜ.க. தரப்பு குற்றம் சாட்டி உள்ளது. மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்தநிலையில், மேற்கு வங்க முதல்-மந்திரிக்கு மம்தா பானர்ஜிக்கு மும்பை பெருநகர நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. தேசிய கீதத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மார்ச் 2ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பை மாநகர பாஜக செயலாளர் விவேகானந்த் குப்தா தொடர்ந்த வழக்கில் மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.