கிளிநொச்சி மாவட்ட திருவள்ளுவர் விழா இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சிறுகதை போட்டியில் வெற்றிபெற்ற அரசியல் கைதியான செ.சதீஸ்குமாரின் வெற்றி சான்றிதழை அவரது தாயார் பெற்றுக்கொண்டார்.
குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் K.சிறிமோகன் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் K.சிறிமோகன் திருவள்ளுவர் திரு உருவ திலைக்கு மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து திருக்குறள் இசைக்கப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.தொடரந்து மாவட்ட ரீதியில் இடம்பெற்ற திருக்குறள் போட்டி மற்றும் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்றவர்களிற்கான சான்றிதிழ்களும், பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது 16 வருடங்களாக அரசியல் கைதியாக தண்டனை அனுபவித்து வரும் கிளிநொச்சி விவேகானந்தாநகர் பகுதியை சேர்ந்த செ.சதீஸ்குமார் எழுதிய சிறுகதை தொகுப்பிற்கான சான்றிதழும், பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த சான்றிதழினையு்ம, பரிசினையும் அவரது தாயார் பெற்றுக்கொண்டார்.குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் ஆற்றியிருந்தார்.குறித்த நிகழ்வின் நிறைவில் சதீஸ்குமாரின் தாயார் நல்லொழுக்கமும், இவ்வாறான திறண்களையும் கொண்ட தனது மகனை பொதுமன்னிப்பளித்து விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகை ஒன்றை விடுத்திருந்தார்.
நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் தனது மகனை ஜனாதிபதி விடுவிக்க வேண்டும் என அவர் இதன்போது கேட்டிருந்தார்.