மன்னார் சின்னபண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் வீடற்ற இரு குடும்பங்களுக்கான புதிய வீடுகள் நிர்மாணித்து கொடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னார் சின்னபண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் வீடற்ற இரு குடும்பங்களுக்கான புதிய வீடுகள் நிர்மாணித்து கொடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் சமூக நல திட்டத்திற்கமைய 653 வது பிரிகேடின் 24 கஜபா படையணி சிப்பாய்களால் மன்னார் சின்னபண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் வீடற்ற இரு குடும்பங்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேற்படி குடும்பங்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு 653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகா அவர்களின் முயற்சியில் 65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப்பணிகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டன. இதற்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவிகள் மடு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டன.இரண்டாவது வீட்டின் கட்டுமானம் செப்டம்பர் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு வீட்டின் நிர்மாண பணிகளை சில வாரங்களுக்குள் நிறைவு செய்ய முன்வந்திருந்தனர். இவ்வீட்டின் 80 சதவீதமான நிர்மாண பணிகள் 11 செப்டம்பர் 2021 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்பட்டிருந்ததோடு அதே தினமான 11 செப்டம்பர் 2021 திகதியன்று இரண்டு வீடுகளினதும் நிர்மாண பணிகளை மதிப்பீடு செய்வதற்கான விஜயமொன்றை 24 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.குறித்த வீடுகள் இரண்டும் 72 வது இராணுவ தினமான எதிர்வரும் அக்டோபர் 10ம் திகதி அன்று பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.