கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இருபது வயது முதல் முப்பது வயதிற்குட்பட்ட இருபத்தி எட்டாயிரத்தி 482 போருக்கான தடுப்புசி செயற்பாடுகள் நாளை முதல்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இருபது வயது முதல் முப்பது வயதிற்குட்பட்ட இருபத்தி எட்டாயிரத்தி 482 போருக்கான தடுப்புசி செயற்பாடுகள் நாளை (20-09-2021)திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 30 வயது பிரிவினருக்குத் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (20-09-2021) திங்கட்கிழமைமுதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20 - 30 வயது பிரிவினர் 28482 பேர் உள்ளனர். அவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று 20ஆம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தர்மபுரம் மத்திய கல்லூரி முழங்காவில் ஆதார வைத்தியசாலை பூநககரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.நாளை செவ்வாய்கிழமை 21ம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலைஅக்கராயன் மகா வித்தியாலயம் இராமநாதபுரம் மகா வித்தியாலயம் முழங்காவில் ஆதார வைத்தியசாலை தர்மபுரம் மத்திய கல்லூரி பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர் கிளிநொச்சி மாவட்டத்தில் இது வரை 61ஆயிரத்து 508 பேர் முதற்கட்ட தடுப்புசிகளையும் 42ஆயிரத்தி 939பேர் இரண்டாம் கட்ட தடுப்புசிகளையும் பெற்றுள்ளனர் என்றும் இதுவரை தடுப்புசிகள் எதனையும் பெற்றக் கொள்ளதவர்கள் இன்றும் நாளையும் மேற்படி தடுப்புசி செலுத்தும் நிலையங்களுக்கு சென்று தடுப்புசிகளை பெற்றுக் கொள்ள முடியும. எனவும் தெரிவித்துள்ளார்.