Category:
Created:
Updated:
மக்கள் விடுதலை முன்னணியினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சுகாதார பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.படுக்கை மெத்தைகள், போர்வைகள், கொவிட் பாதுகாப்பு அங்கிககள், கொவிட் பாதுகாப்பு பொருட்கள் உள்ளிட்டவை இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் கட்சி அமைப்பாளர்களால் குறித்த பொருட்கள் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தனிடம் கையளித்தனர்.