கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 39ஆக வீழ்ச்சியடைந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் தலைமையிலான சுகாதார வைத்திய அதிகாரிகள், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் கடுமையான முயற்சிகளின் பலனாக கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (16-09-2021) 39ஆக வீழ்ச்சியடைந்தது.ஓகஸ்ட் மாத பிற்பகுதியில் நாள் ஒன்றுக்கு 267 வரையில் உயர்வடைந்திருந்த மாவட்டத்தின் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை, படிப்படியாக வீழ்ச்சியடைந்து வியாழக்கிழமை அது 39 ஆக பதிவுசெய்யப்பட்டது.கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் தலைமையிலான சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை மருத்துவர்கள், தாதியர் மற்றும் ஊழியர்களும் கடுமையான முயற்சிகளை எடுத்து வந்தனர்.மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையிலான மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு செயலணியில் அங்கம் வகிக்கும் பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் இதற்கு வேண்டிய முழு ஒத்துழைப்பையும் வழங்கி, தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிவாரணம் உள்ளிட்ட விடயங்களை உரிய முறையில் கையாண்டனர்.இந்த முயற்சிகளின் பயனாக செப்டம்பர் மாத முற்பகுதியிலிருந்து படிப்படியாக வீழ்ச்சயடைந்துவந்த தொற்றாளர் எண்ணிக்கை நேற்றையதினம் 39ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் கொவிட் தொற்று நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்டப் பணிப்பாளர் சரவணபவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்