வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாத நிலையில் வீடுகளின்றி அவல நிலையில் வாழ்ந்து வருகின்றன
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாத நிலையில்; அதன் கட்டுமானப்பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளின்றி அவல நிலையில் வாழ்ந்து வருகின்றன.முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்;டங்கள் வழங்கப்பட்டு அதற்கான கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டநிலையில் அவற்றுக்கான முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கொடுப்பனவுள் மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலையில் வீட்டுத்திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
இவ்வாறு வீடுகள் முழுமைப்படுத்தப்படாத நிலையில் அதன் பயனாளிகள் கடந்த மூன்று வருடங்களாக பருவமழையினால் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் தமது வீடுகள் இவ்வாறு காணப்படுகின்றது என்றும் அதற்கான கொடுப்பனவுகளை வழங்க புதிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்டுள்ள பயனாளிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தினால் இது தொடர்பில் குறிப்பிடுகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையனால் வெள்ள அனர்த்த வீடுகள் நிர்மானத்திற்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 2211 வீடுகள் வழங்கப்பட்டிருந்தன.இதற்கென 1589 மில்லியன் ரூபாநிதி தேவையென கோரிக்கை விடுததக்கப்பட்டதாகவும் இதில் 428 மில்லியன் ரூபா நிதி மாத்திரமே கிடைக்கப்பெற்று பகுதிக்கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டுள்ளன. ஏனைய நிதி கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.