சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம் மனித உரிமை உயர்ஸ்தானிகர் பச்சலற் அம்மையாருக்குக் காட்டமான திறந்த மடல்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம். வெளிநாட்டு அமைச்சர்  பீரிஸ் அதன் கனதியை நீர்த்துப்போகச்செய்யவே எண்ணிக்கையைக் குறைக்கும் விசமத் திட்டத்தில் ஈடுபடுகிறார். இதை மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆமோதிப்பதா? கூடாது என பச்சலற் அம்மையாருக்குக் காட்டமான திறந்த மடல்கடந்த 2000-2021 வரையான இருபது வருட காலப்பகுதியில் ஏறத்தாழ ஆறாயிரம் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விபரக் கோவையைத் தற்போது ஒப்புநோக்கி உறுதிப்படுத்தி வெளியிட இருப்பதாக இலங்கை அரசின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஜெனீவா ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கைக்கு முன்பதாகத் தகவல் வழங்கியிருக்கிறார். அதுவே குறைந்த ஒரு எண்ணிக்கை. அதைக்கூட நான்காயிரத்துக்கும் அல்லது அதற்கும் குறைவாகக் காட்ட முனையும் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அவர் ஆரம்பித்திருப்பதை எவ்வாறு மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆமோதிக்கமுடியும் என்று நேற்று 2021 செப்ரம்பர் 15ம் திகதி புதன்கிழமை காட்டமான திறந்த மடல் ஒன்றை வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு உயர்ஸ்தானிருக்கு அனுப்பிவைத்துள்ளது.ஆங்கில மொழியில் இரண்டுபக்கங்களில் வரையப்பட்ட அந்த மடலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டவையும், கோரிக்கையாக முன்வைக்கப்பட்டவையுமான விபரங்களின் சுருக்கம் வருமாறு:இலங்கை அரசு திட்டமிட்ட இன அழிப்பையே வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்துள்ளது. அதன் ஒரு அங்கமாகவே கடந்த இருபது வருடங்களுக்குள் மாத்திரம் குறைந்தது 15,000 தமிழர்கள் அரச படைகளினாலும் அவர்களால் இயக்கப்பட்டவர்களாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்பது மட்டுமல்ல 95 வீதமானோர் 16 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் ஆவர். இது ஒரு திட்டமிட்ட இன அழிப்புச் செயல். இந்தத் தொகையைக் குறைத்துவிட இலங்கை அரசு முயற்சிக்கிறது. இதை எவ்வாறு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் பீரிஸை ஆமோதிப்பதன் மூலமும் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகப் பொறிமுறையை வரவேற்பதன் மூலமும் அங்கீகரிக்கமுடியும்?இதற்கும் அப்பால், ஆறுமாதங்களுக்கு முன்னர் உள்ளகப் பொறிமுறை படுதோல்விகண்டுவிட்டது, எனவே ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று போன்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறைகள் ஊடாக விசாரிக்க ஆவன செய்யவேண்டும் என்று கடுமையாகப் பிரேரித்து விட்டு அடுத்த சில மாதங்களுக்குள் தீவில் மனித உரிமைகள் சீரழிந்து செல்லும் நிலையிலும் கொழும்பு அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை ஆமோதிக்கும் நிலையை உயர்ஸ்தானிகர் எவ்வாறு கைக்கொள்ளலாம்?இலங்கை அரசிடம் ஐ.நா. தன்னிடமிருக்கும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறையீடுகளை ஏன் ஒப்படைத்தது? இது உறவினர்களுக்கு ஆபத்தானது. இலங்கையின் வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்ற வைத்து, ஐ.நா. மேற்பார்வையில் இங்கு பாதுகாப்பை உறுதி செய்தால் மாத்திரமே காணாமலாக்கப்பட்டோரின் விபரங்களை முழுமையாகத் திரட்டமுடியும்.காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை மூலம், அதுவும் இன அழிப்புக் குறித்த பார்வையுடனான விசாரணைக்கு உள்ளடக்கப்பட்டதாக, மியான்மார் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்குக் கையாண்ட அதியுச்ச நிகழ்ச்சிநிரலுக்குள் வைத்து அணுகப்பட வேண்டும்.எனவே, மனித உரிமைப் பேரவையின் அதியுச்ச நிகழ்ச்சிநிரல் நான்குக்குள் இலங்கையைக் கொண்டுவந்து அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும் என்று தீர்க்கமாகக் கோருகிறோம்.இன அழிப்புக் குறித்த உண்மையைக் கண்டறியும் பணிக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும் என்றும் கோருகிறோம்.பத்மநாதன் கருணாவதி

  • 820
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads