கொவிட் -19 தொற்று நோய் பாதிப்புக்கு இலக்கானவர்களின் உபயோகத்திற்கான வைத்திய உபகரணங்கள் பௌத்த இளைஞர்கள் அமைப்பின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன
முல்லைத்தீவில் கொவிட் -19 தொற்று நோய் பாதிப்புக்கு இலக்கானவர்களின் உபயோகத்திற்கான வைத்திய உபகரணங்கள் மற்றும் மேலதிக பொருட்களும் கொழும்பிலுள்ள பௌத்த இளைஞர்கள் அமைப்பின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.மேற்படி பொருட்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே. வாசுதேவா கையளிக்கப்பட்டன.
ஒக்ஸிமீட்டர்கள் 04 சுவாச செறிவூட்டல் முகக்கவசங்கள் 4 ஒட்சிசன் செறிவூட்டிகள் 6 ஊPயுP முகக் கவசங்கள் 10 சுவாச வெளியேற்றத்திற்கான முகக்கவசங்கள் 1 சிரிஞ்ச் பம்ப் 1 சேலைன் உட்செலுத்தல் இயந்திரம் 1 10 ஒக்ஸிமீட்டர் மற்றும் 1 ஒட்சிசன் சீராக்கி என்பன கோகிலாய் ஸ்ரீ சம்போதி விகாரையின் விகாராதிபதி திசரபு குணரத்ன தேரரின் ஒருங்கிணைப்பில் 59 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனர்ல் ஜீ.டி.பண்டார். 593 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பலமகும்புர ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.