முல்லைத்தீவு மூன்றுமுறிப்பு கிராமத்திற்கான உரிய போக்குவரத்து வசதியின்மை மற்றும் காட்டு யானைகளின் தொல்லை குடும்பங்கள் தினமும் பெரும் கஷ்டங்களில்
முல்லைத்தீவு மூன்றுமுறிப்பு கிராமத்திற்கான உரிய போக்குவரத்து வசதியின்மை மற்றும் காட்டு யானைகளின் தொல்லை என்பவற்றால் 211 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தினமும் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற மாந்தை கிழக்கு பிரதேச பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய எல்லையோர கிராம மாக காணப்படுகின்ற மூன்று கிராம அலுவலர் பிரிவில் 211 குடும்பங்களைச் சேர்ந்த 652 பேர் வரையில் வசித்து வருகின்றனர்அதாவது மூன்று முறிப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள கொம்பு வைத்த குளம் இளமருதன் குளம் மூன்று முறிப்பு உள்ளிட்ட கிராமங்களில் மேற்படி குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த நிலையில் குறித்த பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை தினமும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது குறிப்பாக மேற்படி பிரதேசங்களில் குரங்கு மற்றும் ஏனைய காட்டு விலங்குகளின் அழிவுகளும் அதிகளவில் காணப்படுவதாக பிரதேச விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேற்படி பகுதியில் உள்ள குளங்களில் பயிர் செய்கை காலங்களில் செய்கை ஆரம்பிக்கப்பட்டது முதல் அறுவடை வரை தினமும் இரவு பகல் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக காவல் கடமையில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் உயிர் ஆபத்துக்களை கூட எதிர் கொள்ளும் நிலை காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.