துவரங்குளம் புனரமைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதும் வயல் காணிகள் வனவளத்திணைக்கத்தினால் விடுவிக்கப்பட்டு தமக்குப் பகிர்தழிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்கள்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட துவரங்குளம் புனரமைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதும் அதன் கீழுள்ள வயல் காணிகள் இதுவரை வனவளத்திணைக்கத்தினால் விடுவிக்கப்பட்டு தமக்குப் பகிர்தழிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கைவிடப்பட்ட குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற துவரங்குளம் கடந்த 07 ஆண்டுகளுக்கு முன்னர் புனரமைக்கப்பட்டதுடன் அதன் கீழான வயல்கல் காணிகள் துப்பரவு செய்யப்பட்டு ள்ள போதும் இதுவரை வனவள திணைக்களத்தினால் குறித்த காணிகள் விடுவிக்கப்படவில்லைஅதாவது குறித்த குளம் புனரமைக்கப்பட்டு வயல் காணிகளை துப்பரவு செய்து மக்களுக்கு பகிர்ந்தழிக்கும் வகையில் ஒவ்வொரு விவசாயக் குடும்பங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் 56 குடும்பங்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு 15 ஆண்டுகளிலேயே அதற்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன ஆனால் இதுவரை குறித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவே குறித்த விவசாய காணிகளை விடுவித்து தருமாறு விவசாயக்ககுடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேற்படி குளம் மற்றும் அதன் கீழ் உள்ள பகுதிகள் 1921ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி வனவள திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்ட இடங்கள் என்ற அடிப்படையில் வர்த்தமானி மூலம் பாதுகாக்கபட்ட வனங்களாக அறிவிக்கப்பட்ட பகுதியாக காணப்படுவதால் இதனை விடுவிப்பது சாத்தியமற்ற விடயமாக காணப்படுகின்றது என அறியமுடிகின்றது