விஜயகாந்திடம் சரணடைந்த வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அரசியலில் ஈடுபட்டார். எதிர்க்கட்சி அளவுக்கு உயர்ந்த விஜயகாந்த் கடைசியாக நடந்த தேர்தலில் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் நடிகர் வடிவேலு திமுக கட்சியுடன் சேர்ந்து கொண்டு விஜயகாந்தை பொதுமேடையில் மிகவும் தரக்குறைவாக பேசியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. அதையும் தாண்டி எல்லை மீறி பேசிய வடிவேலு அதன் பிறகு ஆளே அட்ரஸ் இல்லாமல் ஆகி விட்டார். கடந்த 10 வருடமாக வடிவேலு பெரிய அளவு படங்களிலும் நடிக்கவில்லை. அதே போல அவரும் நம்பிச் சென்ற கட்சியும் அவரை கைவிட்டது.
வடிவேலு, நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்ததாகவும், அதேசமயம் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க இருந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு பின்னர் நடிக்க மாட்டேன் என தகராறு செய்ததாகவும் அவர் மீது நடிகர் சங்கத்தில் ரெட்கார்டு போடப்பட்டுள்ளது.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் வடிவேலு சமீபத்தில் நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்தை நேரில் சந்தித்து தேர்தலின்போது அவரைப் பற்றி அவதூறாக பேசியதற்கு தன்னை மன்னித்து விடும்படி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.