சினிமா செய்திகள்
பிரபல சிங்கள நடிகை காலமானார்
இலங்கை திரைப்பட தாரகையான சிங்கள நடிகையான மாலினி பொன்சேகா (76 வயது) இன்று(24.5.25) அதிகாலை காலமானார். அவர் ஏழு சகாப்தமாக திரைதுறையில் மின்னியவர். மேலும
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமானது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சமீப காலமாக லைகா ப்ரோடக்ஷன்ஸ் பல்வேறு சவால்கள
அட்லீ இயக்கும் புது படத்தில் இணைகிறார் தீபிகா படுகோனே
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்ததால்
நடிகர் ஹம்சவிர்தனுக்கு இரண்டாவது திருமணம்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவிர்தன். இவர், 'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
Ads
 ·   ·  3023 news
  •  ·  1 friends
  • 2 followers

அரசு எமது சேவையை புறக்கணிக்கின்றது - தீர்வு வேண்டும் என நியமனம் பெறாத சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தினர் கோரிக்கை

.....

எம்மை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -

நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த, யுனானி, என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம் இருக்கின்றது.

இந்த கற்கை நெறியை நிதைவுசெய்து தமிழ் சிங்களம் முஸ்லிம் என 1700 பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இதைவிட 600 பேர் இறுதிப் பயிற்சி நிலையில் இருக்கின்றனர்.

இதேநேரம் மருத்துவப் பயிற்சி நெறியை முடித்தும் தம்மை பயன்படுத்தாத நிலையில் அல்லது போக்கில் இலங்கையின் சுதேச மருத்துவம் இருப்பது கவலையானது.

மக்களுக்காக சேவை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம் ஆனல் அரசு மௌனமாக இருக்கின்றது.

அதைவிட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாள 1600 இற்கும் அதிகமானோர் இருக்கும் போது வெறும் 350 இற்கும் குறைவானவர்களையே நியமநத்தில் உள்வாங்க அரசு முனைகின்றனர்.

ஆனால் எம்மை கிராமங்கள் தோறும் சமூக நல வைத்திய அதிகாரிகளாக கூட எம்மை பயன்படுத்த முடியும்.

இந்த போக்கால் இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலையே உருவாகின்றது.

நாட்டில் இருக்கும் எமது வளங்களை கொண்டே  மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதை அரசு முன்னெடுப்பதில்லை.

இவ்வாறன நிலையில் மேலதிக தகைமை என்று கூறி வேறு வேலைகளுக்கு கூட எம்மை இணைத்துக் கொள்கின்றார்கள் இல்லை என்றும் கூறிய அவர் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 459
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads