
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடித்தட்டில் கிடந்தவரை கூட சினிமா உச்சத்தில் வைத்து, அழகு பார்த்தது உண்டு.
நடிகர் அஜித் நடித்த திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலம் ஒருவரின் பரிதாப நிலை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. "2013 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆரம்பம்'. இந்த படத்தில் தீவிரவாத குழுவை சேர்ந்த நபர்களில் ஒருவராக நடித்தவர் சவி சிந்து. லக்னோவை பூர்வீகமாகக் கொண்ட இவர், சட்டம் படித்த நிலையில் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக நடிப்பில் தன்னுடைய கவனத்தை செலுத்த துவங்கினார்.
ஆனால் இவருக்கு நினைத்தது போல் பட வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு கட்டத்தில் இவருடைய குடும்பத்தினரே இவரை விட்டு விலகிய நிலையில், தற்போது தன்னுடைய அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக வாட்மேனாக வேலை செய்து வருகிறார். இந்த தகவலை கூறியுள்ள சவி சிந்து தனக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வாட்ச்மேன் வேலை செய்தாலும், தன்னால் தன்னுடைய அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை என்றும், தனக்கு படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் தன்னுடைய வருமானத்தை வைத்து எந்த ஒரு தியேட்டருக்கும் தன்னால் செல்ல முடியவில்லை. அதற்கான பணமும் என்னிடம் கிடையாது என கூறியுள்ளார்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva