
நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான் - பாகிஸ்தான் பத்திரிகையாளர்
பாகிஸ்தான் பிரதமர் போரில் வெற்றி பெற்றதாக, எதிரிகள் தோல்வி அடைந்து கோழைகள் ஆகிவிட்டதாக பெருமையாக பேசிய நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் முற்றிலும் மாறாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "நாம் உண்மையில் போரில் தோல்வி அடைந்து விட்டோம்" என்பது தான் நிஜமான நிலை என்று அவர் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கராச்சியில் உள்ள Malir Cantt என்ற ராணுவ தளத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உண்மை என்றும், அதோடு மேலும் சில இடங்களிலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார். இந்த தாக்குதல் கடல் வழியாக இந்தியா வைத்திருக்கும் INS Vikrant என்ற போர் கப்பலிலிருந்து நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் வெளியிட்ட செய்திகளெல்லாம் பொய்யாக இருப்பதாகவும், பாகிஸ்தான் உண்மையில் இந்த போரில் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கடுமையாக தெரிவித்தார். இதன் பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசின் பொய் அம்பலத்திற்கு வந்துள்ளது