
2025 நிதியாண்டின் வரவிருக்கும் மாதங்களுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பு
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, 2025 நிதியாண்டின் வரவிருக்கும் மாதங்களுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இலங்கையின் 79 ஆவது பட்ஜெட் இன்று(17) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கும் முதல் பாதீடு இதுவாகும்.
வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
பின்னர் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பை மார்ச் மாதம் 21 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
000