
அமெரிக்க - ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில்
சவூதி அரேபியாவில் இன்றைய தினம் அமெரிக்க - ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ரஷ்ய - யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது.
எனினும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு தாங்கள் ஒருபோதும் அழைக்கப்படவில்லை என யுக்ரைன் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியாவில் இன்றைய தினம் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகளில் யுக்ரைன் பங்கேற்கும் என யுக்ரைனுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் கீத் கெல்லாக் கூறியிருந்தார்.
எனினும், தங்களுடைய எந்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என யுக்ரைன் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இன்று பாரிஸில் நடத்தும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறும் தங்களுக்குக் கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
000