Category:
Created:
Updated:
முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திப்பதற்கு பல்வேறுபட்ட தரப்பினர் வருகை தந்திருந்த போதிலும் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அமைச்சர் சந்திரசேகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகப் பிரதமரைச் சந்திப்பதற்காக வருகைதந்த கேப்பாபுலவு மக்களினால் அவரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்று நேற்றையதினம் நடத்தப்பட்டுள்ளது. இதில் கருத்துரைத்த காணி உரிமையாளர்களில் ஒருவர், பிரதமருடன் தாம் காணி விடுவிப்பு தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு வந்திருந்த போதிலும் ஒரு நிமிடம் கூட தமக்கு ஒதுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
000