Category:
Created:
Updated:
மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவத்தினரும் தமது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக கடவுச்சீட்டு பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிர்வாக நோக்கங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
எனினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் கடவுச்சீட்டுகளை உரிய படைப்பிரிவுகளிடம் திரும்பப் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000