
வத்திராயனில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் திறந்து வைப்பு
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் நேற்று (14) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பூர்த்தியடையாமல் காணப்பட்ட வத்திராயன் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஆகியோரின் அதிகளவான நிதிப்பங்களிப்போடு பூர்த்தி செய்யப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது
வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வன் தலைமையில் நேற்று காலை ஆரம்பமான நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கலந்து கொண்டு மண்டபத்தை நாடா வெட்டி திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் வத்திராயன் கிராம அலுவலர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கணக்காளர், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன், தேசிய மக்கள் சக்தியின் மருதங்கேணி கிளை பொறுப்பாளர் ஷாம், சிகரம் கல்வி நிறுவனத்தின் இயக்குனர், வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர், மருதங்கேணி சுகாதார பரிசோதகர், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
000