சினிமா செய்திகள்
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
Ads
 ·   ·  2855 news
  •  ·  1 friends
  • 2 followers

பிரதமர் ஹரிணி யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றாரா? - பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் என இந்திக அனுருத்த தெரிவிப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரசாங்கங்களை மாற்றுவதற்கும், தேர்தல் செயற்பாடுகளுக்கும் நிதியளித்துள்ளதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது இந்த நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டது.

இந்த நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் அந்த நிதி பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகரிடம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்திடமிருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உட்பட முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நிதி பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த குற்றச்சாட்டு குறித்து நாட்டின் இரண்டாம் பிரஜையான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும்.  பிரதமர் கடந்த காலங்களில் சமஷ்டியாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் பௌத்த மதம், பாலினம் விவகாரத்தில் அவர் முற்போக்கான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார். ஆகவே இவ்விடயம் குறித்து பிரதமர் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றார்

000

  • 917
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads