Ads
கல்வி அனுமதிகளைக் குறைக்கும் கனடா
கனடாவின் மக்கள்தொகை 41 மில்லியனைக் கடந்துவிட்ட நிலையில், அதற்குக் காரணம் புலம்பெயர்தல் என்று கூறி, அதைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில், கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர், கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை 35 சதவிகிதம் குறைப்பதாக, அதாவது, 364,000 சர்வதேச மாணவ மாணவியருக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க இருப்பதாக தெரிவித்தார்.
2025இலோ, மேலும் 10 சதவிகித அனுமதிகளைக் குறைத்து, 327,000 சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இப்படி கனடா தொடர்ந்து சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருவதால், மாணவர்களின் பார்வை வேறு நாடுகள் பக்கம் திரும்பிவருகிறது.
Info
Ads
Latest News
Ads