இந்தியா - பங்களாதேஷ் முதல் டெஸ்ட் – தடுமாறும் இந்திய அணி
இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா சார்பில் அஸ்வின் 102 ஓட்டங்களுடனும், ஜடேஜா 86 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதேவேளை இந்தியா - பங்களாதேஷ் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைத் தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் இன்று (19) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பங்களாதேஷில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா என அவர்கள் இதன்போது கோஷம் எழுப்பினர்.
போட்டியைத் தடை செய்யக் கோரிய கடிதத்தைத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா பெற்றுக் கொண்டாலும், போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்தனர்.
இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
000