Category:
Created:
Updated:
வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் முழுமையான அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.
மும்பையிலிருந்து குறித்த விமான நிலையத்துக்குச் சென்ற விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானதை அடுத்து, இந்தநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
135 பேருடன் பயணித்த குறித்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், தொடர்ந்து தேடுதல் பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
000