Category:
Created:
Updated:
பாகிஸ்தானிலிருந்து யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானின் யாசாத் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பயணிகள் உயிரிழந்தனர்.
நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 23 பயணிகள் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதில் படுகாயமடைந்த 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
7 ஆம் நூற்றாண்டில் இறந்த ஷியா துறவி ஒருவரை நினைவுகூருவதற்காக ஈரான் வழியாக ஈராக் சென்றபோது அவர்கள் இந்த ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
000