பங்களாதேஷில் தொடரும் வன்முறை - 1000 இந்திய மாணவர்கள் அவசரமாக வெளியேற்றம்
பங்களாதேஷில் தொடரும் வன்முறையையடுத்து, அந்நாட்டிலிருந்து 1,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய வெளியுறவு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, பங்களாதேஷில் உள்ள இந்திய மாணவர்களை, நேபாளம், பூடான் வழியாக நாடு திரும்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பங்களாதேஷில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுக்கு எதிராக இடம்பெற்வரும் இந்த போராட்டத்தில் 130 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்முறையாக மாறியுள்ள போராட்டம், கட்டுக்குள் அடங்காத நிலையில், நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.
எனினும், வன்முறையை கட்டுப்படுத்த முடியாது, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பாரிய சாவாலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000