Category:
Created:
Updated:
அரசாங்க அதிகாரிகள் மக்களுக்காக உச்சளவில் சிறந்த சேவையை வழங்குவது அவசியம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நாட்டின் அபிவிருத்தியில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள பிரதமர், அதன் மூலமான வெற்றி அனைவருக்குமானதே என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் எதிர்கால பரம்பரைக்காக நம்பிக்கை மிகுந்த நாட்டை உருவாக்குவதற்கு, உற்பத்தித்திறனை அதிகரிப்பது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேச செயலாளர் அலுவலக கட்டிடத்தை நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000