Category:
Created:
Updated:
இவ்வருடம் ஒரேயொரு தேர்தல் மட்டுமே நடத்தப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
துல்கல கண்டவ ஊடாக நாரங்கல வீதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேநேரம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியலமைப்பின் பிரகாரம் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு வேறு எந்த தேர்தல்களும் நடத்தப்படாது, ஜனாதிபதி தேர்தல் மட்டுமே நடத்தப்படும் எனவும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000