இந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை - தமிழ்நாடு சிவசேனா மாநில செயல் தலைவர் சசிகுமார் குற்றச்சாட்டு
இந்திய-இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா மாநில செயல் தலைவர் க.சசிகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வளமான, வலிமையான நடாக இலங்கையை உருவாக்க வேண்டும், என்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையழுத்துட்டுள்ளனர். இந்திய அரசும் பல கோடி நிதியை இலங்கை அரசுக்கு ஒதுக்கியுள்ளது.
அதேவேளை, இந்திய அரசால் இலங்கையில் 10,000 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக, இலங்கையின் கத்தோலிக்க ஆயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுகின்றார்.
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கான கப்பல், விமான போக்குவரத்துகளை விரிவுப்படுத்த இந்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படும் அதன் சுதந்திரமும் பறிபோகும் என அவர் கூறியுள்ளமையை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00