எதிர்வரும் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்ட சபாநாயகர் தீர்மானம்
எதிர்வரும் 2ஆம் திகதி பாராளுமன்றத்தை அவசரமாக கூட்ட சபாநாயகர் தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 16 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றை வழங்குவதற்காகவே நாடாளுமன்றம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்றையதினம் ஜனாதிபதியின் அறிக்கையுடன், நாட்டின் பொருளாதார நிலை, வங்குரோத்து நிலை போன்ற விடயங்கள் தொடர்பிலும் அறிக்கை வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், நாடாளுமன்றம் வழமை போன்று 9 ஆம் திகதி கூடவிருந்த நிலையில், எதிர்வரும் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவிவருகின்றன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சாத்தியமான மறுசீரமைப்பு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்படுத்தலில் ஆளும் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக நம்பப்படுகிறது.
வரவிருக்கும் அமைச்சரவை மறுசீரமைப்பு, தீவிரமான சூழ்ச்சிகள் மற்றும் மூலோபாய சீரமைப்புகளால் வகைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000