Category:
Created:
Updated:
இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான இருதரப்பு உறவுகளில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்துள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் சேனுகா டி செனவிரத்ன ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையின் உயர்ஸ்தானிகர் சேனுகா டி. செனவிரத்ன புதுடில்லியியில் ஜெய்சங்கரை சந்தித்தபோதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், தமது கொழும்பு விஜயம் உட்பட இருதரப்பு உறவுகளில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
000