சினிமா செய்திகள்
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
Ads
 ·   ·  2855 news
  •  ·  1 friends
  • 2 followers

கடற்படை வீரரின் மரணம் - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் - இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இடையில் விசேட சந்திப்பு

இந்திய மீனவர்களைக் கைது செய்ய முற்பட்ட போது இலங்கைக் கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தை இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இலங்கை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் இலங்கை உயர்ஸ்தானிகர் இந்தியாவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இரு நாட்டு கடற்றொழில் அமைச்சுக்களை தொடர்பு கொண்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தாம் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 214 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 28 என்றும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய - இலங்கை கடல் எல்லைகள் 1974 இல் பிரிக்கப்பட்ட நிலையில், 1979 ஆம் ஆண்டில், வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2018 ஆம் ஆண்டு மீண்டும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு அர்த்தமுள்ள வகையில் இதுவரை செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் பல வருடங்களாக பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற போதும் இதுவரை உரிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என்பதும், இவர்களின் அத்துமீறல் காரணமாக வருடத்திற்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

00

  • 440
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads