டேட்டா எண்டரி பண்ற வேலை, மொதல் மாசம் 1000 ரூபா கட்டி டேட்டா வாங்கிட்டா போதும், அப்பறம் லட்ச லட்சமா கொட்டும்....MLM,.ஆம்வே ஃபர்ஸ்ட் நீங்க சேரனும், உங்களுக்கு கீழ 5 பேர சேர்க்கனும், அவங்க அப்படியே சேத்திகிட்டு வந்தா 6 மாசத்துல நீங்க கோடீஸ்வரன்....அனுபவ் பிளான்டேஷன், நீங்க பணம் குடுத்தா தேக்கு மரமா வரவு வைப்போம், அதுல கொட்டும் பாருங்க கோடிகள்....சீட்டு கம்பெனிகள், நீங்க டெபாசிட் பண்ற பணத்துக்கு 40% வட்டி தருவோம், நீங்க சேர்த்து விடற ஒவ்வொருவருக்கும் உங்களுக்கு கமிசன் உண்டு, வட்டி வாங்கியே சில பல கோடிகள் பார்க்கலாம்....குலுக்கல்ல உங்களுக்கு பரிசு விழுந்து இருக்கு, வந்து வாங்கிட்டு போங்கன்னு, குடும்பத்தோட கூப்பிட்டு உக்கார வச்சு, எங்க ரிசார்ட் கிளப்ல சேர வருஷம் 2 லட்சம் மட்டும்தான், சேந்தா வருசத்துல 5 நாள் ஃப்ரீயா தங்கலாம்ன்னு உருட்டுன உருட்டுல...ஈமு கோழி, 10,000 பணம் கட்டிணா உடனே ஒரு ஈமு கோழி குடுப்போம், நீங்க வளத்தி எங்க கிட்டயே குடுத்தா கிலோ 1000 ரூபாய்க்கு வாங்கிக்குவோம், முட்டை ஒவ்வொண்ணும் 500 ரூபா... சீக்கிரம் கோடீஸ்வரன் ஆக, ஈமு கோழிப்பண்ணை.ஹெர்பா லைஃப், இது வெறும் 2000 ரூபாதான், வாங்கி குடிச்சா ஒரு மாசத்துல 200 கிலோ குறையும், நீங்க யாரையாவது கூட்டிட்டு வந்து சேர்த்து விட்டா உங்களுக்கு டிஸ்கவுன்ட்....டப்பர்வேர் வித்த குரூப், ஆம்வே பேஸ்ட் வித்த குரூப், ஓரிபிளேம் பொருள் வித்தவன், கோல்ட் குவிஸ்ட்ல தங்கம் வாங்கின குரூப், சஹாரால இடம் வாங்கினவன், சீட்டு போட்டவன், கலைமகள் சபால இடம் வாங்க காசு குடுத்தவன், டேபிள் மேட் வித்தவன்னு எத்தனை பேர், எத்தனை கண்ணிவெடி, எத்தனை ப்ராடுக....இத்தனை பேரையும் தாண்டி வந்தவனுகதான் 80s & 90s கிட்ஸ், என்னமோ ஒரு V3 Ads க்கே இப்படி ஆடி போய் உக்காந்து இருக்கீங்க.போங்க தம்பி, இது எல்லாம் எங்க வீர வாழ்க்கை முன்னாடி ஒண்ணுமே இல்லை.