Feed Item
·
Added a post

டான்சன், எகிடோ இரு புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது.

ஒரு வளைவில் திரும்பும்போது நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒருபுறத்தில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டியிருந்த அழகான இளம்பெண் அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்றுகொண்டிருந்தாள்.

“இங்கே வா!” என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தூக்கிக்கொண்டு சகதியான தெருவின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்குக் கொண்டு போய் சேர்த்தார்.

அன்று இரவு மடத்திற்குத் திரும்பும்வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான். அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில் செல்வதுகூடத் தவறு. முக்கியமாக இளமையும் அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில் செல்லவே கூடாது.

நீ ஏன் அவளைத் தொட்டுத் தூக்கிகொண்டு சென்றாய்?” என்றார். “நான் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டேன். நீதான் அந்தப் பெண்ணை இன்னும் சுமந்துகொண்டிருக்கிறாய்” என்றார்.

இப்படித்தான் நம்மில் பலரும் தேவையில்லாத பல விஷயங்களை, பிரச்சினைகளை, கஷ்டங்களைத் துாக்கிச் சுமந்து கொண்டிருக்கின்றனர்.

ஒன்று, பிரச்சினைகளை மனதின் உள்ளேயே பூட்டி வைத்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்லது பிரச்சினைகளைத் துாக்கிச் சுமந்துகொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம்.

அல்லது, பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடுவிடுகிறோம். பிரச்சினைகளை மனதில் இருந்து துாக்கியெறிந்து, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களே வெற்றி எனும் இலக்கை அடைகிறார்கள்.

  • 20