·   ·  3 videos
  •  ·  0 friends
  • 828
  • More

தேசிய பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்

 பாடசாலை குறித்து சர்வேஸ்வரன் 

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது. பிஸ்தாவில், நல்ல கொழுப்புகள் மற்றும் ஃபைபர், மெக்னீசியம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்களுக்கு தெளிவான பார்வையை தரும். மேலும் கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

பிஸ்தா பருப்பு உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்வதால் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மற்ற பருப்பு வகைகளை விட பிஸ்தாவில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவே உள்ளது. கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் பிஸ்தாவில் உள்ளது.

பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சரி செய்து மலச்சிக்கல் பிரச்சனை வரவிடாமல் தடுக்கும். தினமும் மாலையில் சூடான பாலில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பிஸ்தா பருப்பு இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தமாக்கும்.

பிஸ்தாவில் மெக்னீசியம் மற்றும் அர்ஜினைனின் அளவு அதிகமாக இருப்பதால் இதய தமனிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

  • 92
·
Added a post

தும்பைப்பூ அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன

தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது.

சிறிதளவு தும்பைப் பூக்களைப் பறித்து, நன்கு அலசிவிட்டு வெறும் வாயில் போட்டு மென்று தின்றால் இருமல், சளி தொல்லை உடனடியாக நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.

சிறிதளவு தும்பைப் பூக்களை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சாற்றினை வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் பனங்கற்கண்டு கலந்து குடித்தால் கடுமையான நீர்க்கோவை நீங்கும்

சிறிதளவு தும்பைப் பூ தேன், மிளகுத்தூள் சேர்த்து இருநாட்களுக்கு காலையும் மாலையும் சாப்பிட அடுக்குத் தும்மல், தொண்டைக்கட்டு நீங்கும்

தும்பைப்பூ, ஏலக்காய், அக்கரகாரம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை தேனில் குழைத்து சிறிது சிறிதாக வாயில் போட்டு வைத்திருந்தால் குரல் கம்மல், தொண்டைக்கட்டு நீங்கும்

25 தும்பை பூக்களை,காய்ச்சிய பாலில் இட்டு, ஒரு மணி நேரம் ஊற வைத்து, குழந்தைகளுக்குக் குடிக்க கொடுத்தால் அவர்களின் தொண்டை பிரச்சனை நீங்கும்

ஒரு கைப்பிடி அளவு தும்பைப்பூவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 10 மிளகு, 100 கிராம் தேங்காய்த் துருவல், 2 பச்சை மிளகாய் எடுத்து அனைத்தையும் சிறிதளவு நெய் விட்டு வதக்கி அரைத்து தினமும் ஒருவேளை துவையலாகச் சாப்பிட்டு வந்தால் மார்பிலுள்ள சுபம் கரைந்து வெளியேறும். ஆஸ்துமா நோயும் கட்டுப்படும்

தேவையான அளவு தும்பைப் பூவையும், தும்பை இலையையும் சேகரித்து அரைத்து சிரங்கு மேலும் உடலில் அரிப்பு இருந்தால் உடல் முழுவதும் தடவிவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும். பிறகு சுட்ட சீயக்காய் மற்றும் மஞ்சளை அரைத்து அதைத் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்

கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப் பூவை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு டம்ளர் வீதம் எடுத்து தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து சாப்பிட்டு வர கண் நோய்கள் குணமடையும்

தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்

ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து, அதன் சாறை குடித்தால் பிரச்னை சரியாகும். தலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசினால் நிவாரணம் கிடைக்கும்

தீராத தலைவலி உள்ளவர்கள் தும்பைப்பூவை கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.

சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்

கால் டீஸ் பூன் அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு தும்பைப்பூவும், சிறிதுவெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து தினம் இருவேளை சாப்பிட குளிர் ஜுரம், வாதஜுரம் குணமடையும்

காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மையாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்தில் மட்டும் உணவில் உப்பு, புளி, அசைவ உணவுகள் சேர்க்கக் கூடாது

  • 94
·
Added a post

அல்சர் போன்ற வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும் தண்ணீர் விட்டான் கிழங்கு

தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு நம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. இது நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.

இதற்கு சாத்தாவாரி, சதாவேரி, நீர்வாளி, நீர்விட்டான், வரிவரி, சதாமூலம், தண்ணீர் விட்டான், நாராயண முலி, சதாவேலி, சதமுலை, உதக மூலம், சீக்குவை, பறனை, பீருதந்தி என வேறு பல பெயர்களும் உள்ளன. இதன் தண்டு, வேர், இலை, கிழங்கு ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதாகும்.

தண்ணீர் விட்டான் கிழங்கை பயன்படுத்தினால் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் குணமாகும். நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

ரத்தத்தை சுத்திகரித்து நல்ல தூக்கத்தை தரக் கூடியது. குடல் வலி, வயிற்றுப் போக்கு, பசியின்மை போன்ற அனைத்தையும் குணமாக்க கூடியது. இது வெள்ளை வெட்டு நோய் தொந்தரவுகளில் இருந்து நம்மை காக்கும். பித்தம், எலும்புருக்கி நோய், நாள் பட்ட காய்ச்சல் ஆகிய அனைத்துப் நோய்களையும் குணமாக்கும்.

இது உடல் உள்உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்களை ஆற்றுகிறது. அல்சர் போன்ற வயிற்றுப் புண்களுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு மிகச்சிறந்த மருந்து ஆகும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு வேர்த்தூளை, ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனைப் பசுவின் நெய்யோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளைகள் உட்கொண்டு வந்தால் சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெறும்.

  • 101
·
Added a post

40 வயதில் மூளையில் கட்டி வந்திருப்பது மருத்துவர்கள் மூலம் ஆங்கில நாவலாசிரியரும் விமர்சகருமான ஆண்டனி பர்ஜஸ் தெரிந்து கொண்டார். அவருக்கு முன்னால் ஒரே ஒரு குளிர் காலம், ஒரே ஒரு வசந்த காலம் ,ஒரே ஒரு கோடை காலம் இருந்தது. இன்னும் மிச்சம் இருக்கும் ஒரு வருடத்தை எப்படி அர்த்தம் உள்ளதாக ஆக்குவது என்று நினைத்தார். இதுவரை

நாவல் எழுதி இருக்காத அவர் நாவல் எழுதத் தொடங்கினார். ஒரே ஆண்டில் அவசரமாக ஐந்து நாவல்கள் எழுதினார். டி எச் லாரன்ஸ் வாழ்நாள் முழுவதும் எழுதியதை ஒரே ஆண்டில் முடித்தார். அவரது மூளையில் இருந்த கட்டி மறையத் தொடங்கியது.

76 ஆண்டுகள் வரை வாழ்ந்த அவர் 70 நாவல்கள் எழுதி முடித்தார்.A clockwise orange உலகப் பிரசித்தி பெற்றது. மிகப்பெரிய விமர்சகராக விளங்கினார் .

இந்த உண்மை சம்பவம் சொல்லும் விஷயம் இதுதான் ..நம் கஷ்டங்களை நினைத்துக் கொண்டு கண்ணீர் விடுவதை காட்டிலும் கஷ்டங்களை மறந்து பிடித்த விஷயத்திலே கவனம் செலுத்துகின்ற போது நம் கஷ்டங்கள் மறைவதோடு நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கையை இறைவன் அருள்வான்..!!

  • 104
·
Added a post

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு…

ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்.

நேதாஜி அவர்கள் “இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” என்றார்…!

(எத்தனைமுறை படித்தாலும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிற ஒரு சரித்திர நிகழ்வு

  • 107
·
Added a post

பூசணிப்பழம் சுவையான சமையலுக்கு மட்டுமல்ல, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ-ஆக மாறி, கண் பார்வை திறனை பாதுகாக்கவும், சரும ஆரோக்கியத்தை பேணவும் உதவுகிறது.

பூசணியில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன.

குறிப்பாக, இதில் உள்ள வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பூசணி விதைகளில் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துக்கள் இருப்பதால், அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகளின் வலிமைக்கும் உதவுகிறது.

  • 117
·
Added a post

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.

கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது.

நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.

  • 118
·
Added a post

1. நடக்கும் போது, ஒரு பக்கம் தலைய சாச்சி கிட்டு, செல்போன்ல பேசிகிட்டு நடக்க வேண்டாம். முடிந்தால் செல்போனை வீட்டுல வச்சிட்டு வாங்க. தலையை உயர்த்தி, வயிற்றின் தசைகளை மென்மையாக உள்ளிழுத்து, கைவீசம்மா கைவீசு என்று நடக்க வேண்டும்.

2. சரியான நடைப்பயிற்சியில் வியர்ப்பது இயல்பு. எனவே இறுக்கமான, பாலியெஸ்டர் ஆடைகளைத் தவிர்க்கவும். உடல் சோர்ந்து போகாமல், வியர்வையை உறிஞ்ச ஏதுவாக, தள‌ர்வான காட்டன் ஆடைகளை அணியவும்.

3. கால்களை மூடும் விதமாக, மென்மையாக பாதங்களை இறுக்காமல் ஷீ அணிந்து கொள்வது நல்லது.

4. மூளையில் ஏற்படும் செரோடினின் பகிர்ந்தளிப்பு, உடலில் என்சைம்களின் சுரப்பு…உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இதயத் துடிப்பு சீராகி, ப்ரோஸ்டோகிளான்டின்களின் சுரப்பு மூலம், மூட்டுகளுக்கு தேவையான லூப்ரிகேஷன் கிடைத்து, தசைகளின் இலகுவாகி, உடலுக்கு தேவையான சக்தி சேமித்து வைக்கப் பட்டுள்ள கார்போஹைட்ரேட்டிடமிருந்து எடுத்துக் கொள்ளப் படும்.

5. பிரிஸ்க் வாக் மூலம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்த ஓட்டம் மூலம் ஆக்சிஜன் சுழற்சி ஏற்பட்டு, சுமார் 6 கலோரிகள் செல்வழிக்கப் படிகிரது.

6. முதல் 5 நிமிடங்களில் உடலுக்கு உற்சாகம், 10 முதல் 20 நிமிடங்களில் உடல் வெப்பமடைதல், தோலுடன் சேர்ந்துள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து வெப்பம் வெளியேறி, உடல் வியர்க்க துவங்கும். சக்தியளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு, சுவாசம் அதிகரிப்பு நடைபெறும்.

7. சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் உடல் லேசாகி, கொழுப்பு சத்து எரிந்து, இன்சுலின் சுரப்பு சீராகும்.

8. ஒரு மணி நேரத்தில், நமது நடையின் வேகத்தை குறைக்க, இதயத் துடிப்பு சீராகி, வியர்வைகள் அடங்கி, அதன் பின்னரும் ஒருமணி நேரம் கலோரிகள் செலவாகும் என்பது மருத்துவ ரீதியான உண்மை.

9. அதிக பருமனானவர்கள், இதயம் பலகீனமானவர்கள், ஆஸ்த்துமா பிரச்சினைகள் உள்ளவர்கள், எலும்பு மர்றும் மூட்டு நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள்….அதற்கேற்ப மருத்துவ ஆலோசனை பெர்று நடை பயிற்சியை தொடரலாம். இல்லையெனில் சிக்கல் தான்.

  • 120
·
Added a post

திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணத்தில் ஒரு கதையும் சொல்லப்பட்டுள்ளது அது:

மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.

அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று மழை பொழியத் தொடங்கியது.

பூமியில் நடக்கும் அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள்.அக்கினி மலையிலானது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட பூமாதேவியை குளிர்விக்க - சாந்தப்படுத்த - இப்படிப்பட்ட அமுத புஷ்ப மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது.

ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் ஒரேயொரு அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். பூமி குளிரும் .விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.

மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அவள் வாயில் பட்டது. அதில் அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது.

அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.

மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.

அந்த அமுத துளி

யார் மேல விழும் ..??

கிரி வலம் வரும்போது

அமுத புஷ்ப மழைத் துளி

நம் மேல விழுமா ..?!

இனி கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், முடிந்தவர்கள் மழைக்கு ஒதுங்கவேண்டாம் ..!!

  • 119
·
Added a post

இளம் பருவத்தினர் பலரும் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பல் வலி. உணவு சாப்பிடுவதற்கு கூட சிரமமளிக்கும் அதனை தவிர்க்க சில யோசனைகள் முறையாக பல் விளக்காமல் இருப்பது, தவறான பிரஷ்ஷிங் முறை, எக்கச்சக்கமான சர்க்கரை பொருட்களை சாப்பிடுவது போன்றவை பல்லுக்கு பிரச்சனையை உண்டாக்கிடும்.

உப்புத்தண்ணீர் :

ஈறு பகுதி வீங்கியிருந்தாலோ அல்லது வாயில் பாக்டீரியா தொற்று வந்திருந்தால் இதனை மேற்க்கொள்ளலாம். தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலந்து விடுங்கள். பின்னர் அந்த தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் பாக்டீரியா தொற்று இருந்தால் சரியாகும்.

மிளகு :

இதனை நேச்சுரல் தெரபி என்று கூட சொல்லலாம். இதனைச் செய்வதால் பற்கூச்சம், வீக்கம், வாய்ப்புண், சொத்தைப்பல் , போன்றவை நிவர்த்தியாகும். இது மதமதப்பு தன்மையை கொடுக்கும்.

ஐந்து மிளகு மற்றும் இரண்டு கிராம்பு எடுத்து அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது இரண்டு பொடியாக்கி, அந்த பொடியை நோய்த்தொற்று ஏற்பட்ட இடத்தில் தடவிக்கொள்ளலாம்.

ஆலிவ் வேரா ஜெல் :

இதில் ஆன்ட்டி செப்ட்டிக் ப்ராப்பர்டீஸ் நிறையவே இருக்கிறது. இவை பற்களில் தடவுவதால் பாக்டீரியா பரவாமல் தடுக்கப்படும். ஈறு வீங்கியிருந்தால் இந்த ஜெல்லைக் கொண்டு லேசான அழுத்தம் கொடுத்து வர வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை :

ஒரு கிளாஸ் சூடான தண்ணீருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் பாக்டீரியா அழிவதோடு, பாக்டீரியாவால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்திட முடியும்.

இஞ்சி :

இஞ்சியை அரைத்து விழுதாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் இரண்டு பூண்டு பற்களை சேர்த்து நன்றாக நுணுக்கி பற்களில் தடவி ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருங்கள். இப்படி வைத்திருக்கும் போது இஞ்சி விழுதை முழுங்கிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து அதனை கழுவிவிடலாம்.

இது அதீத வலிக்கு ஒரு ப்ரேக் கொடுப்பது போல சில நாட்களுக்கு நிவாரணம் வழங்குமே தவிர முற்றிலும் தீர்வாக அமையாது. பற்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

  • 128
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பேச்சுகளில் கனிவு வேண்டும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை தவிர்க்கவும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

ரிஷபம்

வியாபாரத்தில் அறிமுகம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். மற்றவருக்கு உதவுவது திருப்தியையும் தரும்.காரிய அனுகூலம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் தேவைக்கு இருக்கும். வாகன பராமரிப்பில் கவனம் வேண்டும். நிறைவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கடகம்

எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். தெளிவுகள் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

சிம்மம்

மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். குடும்ப விஷயமாக அலைச்சல் உண்டாகும். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பரிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கன்னி

செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வருமானத்தில் இருந்த தடை விலகும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை அமையும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

துலாம்

எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் இருந்த கவலைகள் குறையும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

 

விருச்சிகம்

உறவுகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். மனதில் புது விதமான சிந்தனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

தனுசு

மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மகரம்

பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். அமைதி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

கும்பம்

மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மீனம்

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மேலதிகாரியுடன் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருவாயில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். வியாபார விருத்தி சார்ந்த முயற்சிகளை எடுப்பீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

  • 267
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 18.12.2025.

இன்று அதிகாலை 03.51 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று இரவு 09.34 வரை அனுஷம் . பின்னர் கேட்டை.

இன்று மாலை 04.03 வரை திருதி. பிறகு சூலம்.

இன்று அதிகாலை 03.51 வரை வணிசை. பின்னர் மாலை 04.54 வரை பத்திரை . பிறகு சகுனி.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=361&dpx=2&t=1766036910

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 279

Good Morning..

  • 278
·
Added a news

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், அண்டை வீட்டாரின் நாயை “வன்முறையுடன் கூ ட்டாக தாக்கி” களவாடிய சம்பவத்தில் ஒரு பெண் கொள்ளை குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை என அண்மையில் வெளியான நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷய்னி கிறிஸ்டி அன்டோனியோஸ் என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜூரி விசாரணையில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். தண்டனை தொடர்பான தீர்ப்பு கடந்த வாரம் இணையத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொனிக்கா கிளைட்டன் என்ற பெண், நாயுடன் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் மூன்று பெண்கள் அணுகி, தாக்கி, தள்ளி, உதைத்து, நாயை வலுக்கட்டாயமாக கொள்ளயைிட்டுச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.

நாயை களவாடிய பெண்ணுக்கு 846 டொலர்களை செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 465
·
Added a post

ஆறு மிளகுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு இடித்து ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் இதை சேருங்கள். பின் அடுப்பை பற்ற வைத்த சூடேற்றுங்கள். மிளகுடன் மூன்று திப்பிலிகளை இடித்து சேருங்கள். பின்னர் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி துண்டுகளாக கிழித்து சேருங்கள். ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஆனது ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டியதும் அடுப்பை அணைத்து நா பொறுக்கும் சூட்டில் ஆற விட்டு விடுங்கள். இந்த கசாயத்தை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்பு குடித்து வந்தால் விரைவாகவே சுவாசக் குழாய் விரிவடைய ஆரம்பித்து விடும். இதனால் மூச்சு விடுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல சுவாசம் உண்டாகக்கூடும்.

  • 482
·
Added a post

வாயு உருவாவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து, ஸ்டார்ச் மற்றும் சர்க்கரையை உள்ளடக்கிய செரிக்கப்படாத கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இவை மட்டுமல்ல, கந்தகம் நிறைந்த உணவுகள், சிக்கலான சர்க்கரை, ராஃபினோஸ் மற்றும் சர்க்கரை ஆல்கஹாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளும் நம் உடலில் வாயுவை ஏற்படுத்தும். எனவே, உடைக்க கடினமாக இருக்கும் அந்த உணவுகள் தான் அதிகமாக வாயுவை வெளியேற்றுவதற்கு முக்கியக் காரணம்.

என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?

வாயு வெளியேறும் அசெளகரியத்தை நீங்கள் உணர விரும்பவில்லை என்றால், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், வேர் காய்கறிகள், மாவுச்சத்து நிறைந்த உணவுகள், முழு தானியங்கள் மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டாம். ஒயின் மற்றும் பீர் போன்றவற்றில் கூட கந்தகச் சத்து அதிகம் உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

வாயுவைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்

இது மிகவும் எளிமையானது. ஒருவர் அதிக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், உணவுப் பழக்கத்தைப் பற்றி பேசும்போது, ​​உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் காற்றை விழுங்குவது குறைவாக இருக்கும். அது நம் உடலில் வாயுவை உண்டாக்கும்

  • 482
·
Added article

பிரசாந்த் அஜீத், விஜய் வரிசையில் இருந்திருக்க வேண்டிய முன்னணி கதாநாயகன். காலமும் சூழலும் யாரை எங்கே தள்ளும் என்பதற்கு உதாரணமாகி எங்கே இருக்கிறார் என்றுகூடத் தெரியாத அளவுக்கு மாறினார் பிரசாந்த். திரைவாழ்வில் தோல்வி… திருமண வாழ்வில் ஏமாற்றம்… உடல் பருமன் என பிரசாந்துக்கு அடுக்கடுக்கான பிரச்னைகள். படங்களில் அல்ல, பட விழாக்களில்கூட பிரசாந்தை பார்க்க முடியாத நிலை. மகனுக்கு ரீ என்ட்ரி கொடுக்க ஒரே துணையாய் உற்ற உறவாய் நின்றவர் அவர் தந்தை தியாகராஜன் தான்.

அந்தாதூன் படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கிய தியாகராஜன் பிரசாந்தை அதில் நடிக்க வைத்தார். ஜோதிகாவை வைத்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய பெட்ரிக் தான் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், பிரசாந்துக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. அடுத்து இன்னொரு இயக்குநர் மாறினார். அவரும் செட்டாகவில்லை. ஒருகட்டத்தில் மகனின் மனமறிந்து இயக்க தானே இயக்குநராக முடிவெடுத்தார் தியாகராஜன்.

ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல… மூன்றரை வருடங்கள் அந்தகன் படத்தை அணு அணுவாகச் செதுக்கினார்கள். “அந்தகன் ரிலீஸாக வாய்ப்பே இல்லை” என்கிற அளவுக்கு சிலர் அவதூறு பரப்பினார்கள். ஆனால், பிரசாந்தை மறுபடி மக்கள் முன்னால் நிறுத்தி தள்ளாத உடல் நிலையிலும் தியாகராஜன் ஒவ்வொரு ஊராகச் சென்றார். உற்சாகமாகப் பேசினார். “என் மகனுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. இனி அவன் ஓடிக்கொண்டே இருப்பான்…” என பேட்டி கொடுத்தார்.

்தகன் படம் இப்போது மரியாதையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ப்ளூ சட்டை மாறனே புகழ்ந்து தள்ளுகிற அளவுக்கு பிரசாந்த் நடிப்பு பெயர் வாங்கி இருக்கிறது. அத்தனை பேர் கைவிட்ட நிலையிலும் அப்பா என்கிற உறவு பிரசாந்தை மறுபடியும் முன்னணி ஹீரோவாக்கி இருக்கிறது. மகனை மறுபடியும் ஒரு வெற்றியாளனாகப் பெற்றெடுத்து இருக்கிறார் தியாகராஜன். ‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்பது இதுதான்…

  • 490
  • 486
  • 490
  • 498
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

புதிய முயற்சிகள் இழுபறியாகி முடியும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். சிறு வார்த்தைகள் கூட மனக்கசப்பை ஏற்படுத்தலாம். பலதரபட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். நீங்கி வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. புரிதல் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

துணைவர் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும் . குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளால் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதமாமாகும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். எதிர்ப்பு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

மிதுனம்

சமயோசிதமாக பேசி காரியத்தை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கடகம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

சிம்மம்

உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பூர்விக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நட்பு வட்டம் விரிவடையும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கன்னி

அரசு விவகாரத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பின்னணியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

 

துலாம்

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதமாக முடியும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

விருச்சிகம்

உதவி செய்வோரின் சுய ரூபங்களை அறிவீர்கள். தொழில் நிமித்தமான சிலரின் அறிமுகம் ஏற்படும். அலுவல் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். பொன் பொருள்களை கையாள்வதில் கவனம் வேண்டும். துணைவர் பற்றிய புரிதல் மேம்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

தனுசு

எடுத்த காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். கடன் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். இனத்தாரின் ஆதரவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். உறவினர்களை அனுசரித்து செல்லவும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

சகோதரர்களால் சிறு சிறு சங்கடம் ஏற்படக்கூடும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடடையும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிர்வாக துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மீனம்

வாழ்க்கை துணை வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். புதிய முயற்சிக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியம் சாதகமாக முடியும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

  • 765
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 17.12.2025

இன்று அதிகாலை 01.38 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று இரவு 07.00 வரை விசாகம் . பின்னர் அனுஷம்.

இன்று மாலை 03.30 வரை சுகர்மம். பிறகு திருதி.

இன்று அதிகாலை 01.38 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.45 வரை கரசை . பிறகு வணிசை.

இன்று காலை 06.22 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=360&dpx=2&t=1765941304

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 774

Good Morning...

  • 784
  • 926