- · 1 friends
-
1 followers
நல்ல திறமை
நல்ல திறமை இருக்கு, ஆனா சரியான இடம் கிடைக்கல
எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நாளைய தினம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இந்த வெள்ளிக்கிழமை முதல் துறக்க உள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு இன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சமூக ஊடக பதிவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டிலிருந்து கனடாவின் நாடாளுமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்கும், கனடிய மக்களுக்கும் சேவை செய்தது மிகப் பெரிய பெருமை என ஃப்ரீலண்ட் குறிப்பிட்டுள்ளார்.
திங்கட்கிழமை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஆலோசகராக ஃப்ரீலண்டை நியமித்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, உக்ரைனின் மறுசீரமைப்பு தொடர்பான கனடாவின் சிறப்பு பிரதிநிதி பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்ததுடன், “வரும் வாரங்களில்” நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், வெளிநாட்டு அரசாங்கத்துக்கான ஆலோசகர் பதவியை ஏற்றுக்கொண்ட உடனேயே அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், ஒழுக்க நெறி விமர்சகர்களும் கேள்வி எழுப்பினர்.
கணவன்- மனைவியான தம்பதிகள் ஜோடிக்கு மூன்று மகள்கள். அவர்களுக்கு திருமணமான மருமகன்கள் ஆகியோருக்கும் சேர்த்து மூன்று ஜோடிக்குமாக மூன்று வீடுகள் கட்டிக் கொடுத்து பக்கத்திலேயே வைத்திருந்தார்கள்.
ஒரு நாள் மாமியாருக்கு மூன்று மகள் மற்றும் மருமகனுக்கு சொத்தில் எந்த அளவு பங்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைவில் வந்தது. எனவே அவர்கள் மூவருக்கும் சோதனை வைக்க விரும்பினார்.
முதல் நாள் அன்று வீட்டின் மூத்த மருமகனை அழைத்துக் கொண்டு மருமகனே!என்னை இங்கிருக்கும் ஏரியில் நம்முடைய படகில் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.
மருமகனும் மாமியாரை அழைத்துக் கொண்டு படகில் சென்றார்.ஏரியின் நடுவில் சென்று கொண்டிருக்கும் சமயம் மாமியார் சின்னதாக டான்ஸ் ஆடி ஏரியில் விழுந்து விட்டார் மருமகன் உடனே பதறிப்போய் ஏரியில் குதித்து மாமியாரைப் படகில் ஏற்றிக்கொண்டு முதல் உதவி செய்து கரைக்கு கூட்டி வந்தார்.
மறுநாள் காலையில் எழுந்து வாசல் தெளிக்கும் சமயம் வாசலில் மாமியாரை காப்பாற்றிய மருமகனுக்கு மாமியாரின் அன்பு பரிசு! என்று ஸ்டிக்கர் எழுதி புத்தம் புதிய மாருதி 800 கார் நின்று கொண்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு பிறகு இரண்டாவதாக இருக்கும் மருமகனை மாமியார் அதேபோல் அழைக்க விவரம் தெரியாத மருமகனும் அதுபோலவே மாமியாரை ஏரியில் படகில் அழைத்துச் சென்றார்.
நடு ஏரியில் செல்லும் சமயம் வழக்கம் போல மாமியார் சின்னதாக டான்ஸ் ஆடி ஏரியில் விழுந்து விட்டார். மருமகனும் உடனே பதறிப்போய் ஏரியில் குதித்து மாமியாரை தாங்கி தூக்கி பிடித்து படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்தார்.
மறுநாள் காலையில் மருமகன் எழுந்து வாசல் தெளிக்க வந்து பார்க்கும் சமயம் மாமியாரை காப்பாற்றிய மருமகனுக்கு மாமியாரின் அன்பு பரிசு! என்று ரெனால்ட் க்விட் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது
இரண்டு நாட்களுக்கு பின்னர் கடைசி மருமகனுக்கு சோதனை! அதேபோல மருமகன் ஏரியின் நடுவில் சென்று கொண்டிருக்கும் சமயம் கடைசி மருமகன் ரொம்ப யூத் என்பதால் மாமியார் சற்றே அதிக சந்தோசமாகவே நடனமாடி ஏரியில் விழுந்து விட்டார்.
மருமகன் கையை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். மாமியார் காப்பாற்றுங்க மாப்பிள்ளை! காப்பாற்றுங்க மாப்பிள்ளை! என்று கத்தியும்,கதறியும் மருமகன் ஒன்றும் செய்யவில்லை.
பிள்ளையா பெத்து வளர்த்து வச்சுருக்குறே?என்றவாறு கடுப்பில் அமர்ந்துவிட்டார்.சிறிது நேரம் கழித்து மாமியார் அடங்கியதும் மாமியாரை படகில் எடுத்துப் போட்டுக் கொண்டு கரை வந்து சேர்ந்து விட்டார்.
மறுநாள் காரியம் முடிந்தது. மூன்றாம் நாள் காலை கதவு திறந்து பார்த்ததும் சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள புகாட்டி கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது எனதருமை இன்னுயிர் மருமகனுக்கு மாமனாரின் அன்பு பரிசு! என்று எழுதி இருந்தது
பேச்சாளர் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு சண்டை. மனைவி கணவன் கிட்ட உங்களுக்கு என்ன நீங்க ஜாலியாக ஒவ்வொரு ஊராக பேசுகிறேன் என்று ஊர் சுற்றுகிறீர்கள் . நாங்க வீட்டில் கிடந்து சாக வேண்டி இருக்கு.
சண்டை அதிகம் ஆக இருவரும் பேசாமல் இருக்க.
அப்பொழுது அவன் நண்பன் வீட்டுக்கு வந்தான். அங்கு இருக்கும் சூழலை புரிந்து கொண்டவன் அவர்களை பார்த்து உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்க, கணவன் சொல்வான் என்று மனைவியும் மனைவி சொல்வாள் என்று கணவனும் பேசாமல் இருக்க,
பொறுமை இழந்தவன் நண்பனை பார்த்து இங்க பாருடா இந்த சண்டைக்கெல்லாம் ஒரே தீர்வு நீ எந்த ஊர் சென்றாலும் உன் மனைவியை கூட்டிட்டு போ! எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும் என்று தீர்ப்பு சொல்ல.
குஷியான நண்பனின் மனைவி இருங்க உங்களுக்கு நான் ஃபில்டர் காஃபி போட்டு எடுத்து வாரேன் என்று சொல்லிட்டு வேக வேகமாக சமையல் அறை நோக்கி செல்ல.
அமைதியாக இருந்த கணவன் அட சாண்டாளா பிரச்சினையின் ஆரம்பமே நான் அவர்களை வெளியூர் கூட்டி செல்லாதது தான் ஒரு காபிக்கு அவ பக்கம் தீர்ப்பை சொல்லிட்டையே, என் கிட்ட கேட்டிருந்தா நான் உனக்கு வெளியில் டிஃபன் வாங்கி கொடுத்து இருப்பேன் என்றான் வருத்தத்துடன்.
வாய்ப்புண்களின் சில வகைகள் உண்டு. வாயின் ஓரத்தில் புண்கள் வருவது, கீழ் மற்றும் மேல உதடுகளின் மேல் மற்றும் உள்புறத்தில் புண் வருவது என பல விதங்கள் உண்டு.
சிலசமயங்களில் இந்த வாய்ப்புண்கள் லேசான வலியுடன் வரும். சில சமயங்களில் வீக்கங்கள் ஏற்படும். இந்த வாய்ப்புண் சரியாக கிட்டதட்ட ஒரு வாரம் பிடிக்கும். குறிப்பாக வீட்டிலுள்ள சில பொருள்களை பயன்படுத்தி எப்படி வாய்ப்புண்ணை சரிசெய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
வாய்ப்புண்ணை சரிசெய்யும் தேன் :
தேனில் உள்ள ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள் உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது.
இது தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதோடு எரிச்சல் மற்றும் வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
அதனால் வாய்ப்புண் இருக்கும்போது இந்த இடத்தில் சிறிது தேன் தடவி விட்டுவிடுங்கள். தேன் அப்ளை செய்து சில நாட்களிலேயே வாய்ப்புண் சரியாகும். அந்த இடத்திலிருக்கும் தழும்பும் மறைந்து வடுக்கள் இல்லாமல் சருமத்தை மென்மையாக மாற்றும்.
வாய்ப்புண்ணை சரிசெய்யும் தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயில் மிக அதிக அளவில் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள் அதிகம் உண்டு. இது உடலில் இருக்கும் காயங்கள் மற்றும் வாய்ப்புண் ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது.
அதேபோல தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகளும் நிறைந்திருக்கின்றன. இவற்றில் உள்ள மருத்துவப் பண்புகள், வாய்ப்புண், வலி மற்றும் வீக்கத்தை சரிசெய்ய உதவும்.
வாய்ப்புண்ணை சரிசெய்யும் துளசி இலைகள் :
துளசி இந்திய பாரம்பரியத்தில் வழிபாட்டுக்கு உரியதாகவும் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியதாகவும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆயுர்வேதத்தில் துளசியை வைத்து நிறைய தெரபி சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதில் ஹீலிங் பண்புகள் அதிகமாக இருக்கின்றன.
வாய்ப்புண்ணால் அவதிப்படுகிறவர்கள் பத்து துளசி இலைகளை வாயில் போட்டு மென்று பின்பு சிறிது தண்ணீர் குடித்துவிட வேண்டும்.
இதை தொடர்ந்து சில நாட்கள் செய்து வரும்போது வாய்ப்புண் சரியாகும். இது வாய்ப்புண் மட்டுமல்ல, மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் சளியைக் கூட சரிசெய்து விடும்.
வாய்ப்புண்ணை சரிசெய்யும் மஞ்சள் :
இந்திய பாரம்பரிய உணவுகள் பெரும்பாலானவற்றில் பயன்டுத்தப்படும் மசாலா பொருள்களில் ஒன்று மஞ்சள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.
ஆன்டி - செப்டிக் மற்றும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள் கொண்ட மஞ்சள் பல்வேறு வகையான தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. குறிப்பாக வாய்ப்புண்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக இது செயல்படும்.
இரண்டு சிட்டிகை அளவு மஞ்சளை எடுத்து சில துளிகள் தண்ணீர் விட்டு குழைத்து பேஸ்ட்டாக்கி அதை காலை மற்றும் இரவு படுக்கச் செல்லும்முன் வாய்ப்புண்கள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து வர வேண்டும். இப்படி செய்து வரும்போது ஒரு சில நாட்களிலேயே நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
முகப்பருக்களுக்கு காரணம்
எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு இயல்பாகவே முகப்பரு பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கும். இவை தவிர வெளியில் செல்லும் போது முகத்தில் படியும் தூசுகள் சரும துளைகளை அடைத்து பருக்களை உண்டாக்கிவிடும்.
பருக்களைக் கிள்ளி அல்லது கைகளால் உடைக்கும் போது அதிக அளவு பருக்கள் வந்துவிட வாய்ப்புண்டு என் பதால் இயன்ற அளவில் பருக்களைத் தொடாமல் அதை நீக்குவதற்கு முயற்சிப்பதுதான் சிறந்த வழி.
பொடுகுத்தொல்லை, மலச்சிக்கல், அடுத்தவர் உபயோகித்த சோப், டவல், படுக்கையை பகிர்தல், சுகாதார மில்லாத நீர், அதிக கெமிக்கல் நிறைந்த க்ரீம்கள் பயன்படுத்துவது, மன அழுத்தம், செரிமான கோளாறு, முகத்தில் படியும் அதிகப்படியான அழுக்கு, எண்ணெய் அதிகம் நிறைந்த உணவுகள், போதிய நீர் குடிக்காதது, இளம்பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றை இதற்கு காரணமான சொல்லலாம்
இவற்றில் ஒன்று உங்களிடம் இருந்தாலும் கண்டிப்பாக முகப்பருக்களை கட்டுப்படுத்துவது கடினமாக இருக் கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தக்காளி
பழுத்த தக்காளியைக் கூழ்போல் மசித்து கொள்ளவும். சுத்தமான நீரில் முகத்தைக் கழுவவும். மசித்த தக்காளி கூழை எடுத்து முகத்தில் கீழி ருந்து மேல் நோக்கி மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகம் கழுவினால் முகப்பருக்கள் மறையும். மேலும் முகப் பருக்கள் வருவதைத் தடை செய்யும்.
பூண்டு,வெங்காயம்
பூண்டு, வெங்காயச்சாறு இரண்டுமே முகப்பருவை உண்டாக்கும் அழுக்குகளை நீக்கும் வல்லமை கொண்டது. பூண்டை நசுக்கி சாறு பிழிந்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு தேய்த்து வந்தால் முகப்பரு பெரிதாகாமல் மறையும். இதே போன்று சின்ன வெங்காய சாறையும் தடவி வரலாம்.
வாழைப்பழத்தின் தோல்
வாழைப்பழத்தின் தோலுடன் பசுவின் பாலேடு அல்லது தயிர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வரவும். தொடர்ந்து செய்யும் போது பருக்கள் வேரோடு உதிர்ந்துவிடும். கருமை நிறமும் தங்காது.
கிராம்பில் உள்ள சத்துக்கள் :
கிராம்பு பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் கே,வைட்டமின் சி, நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களோடு அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இது ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். இது ஒரு கிருமி நாசினியாகவும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
கிராம்பில் 70 முதல் 90% வரை யூஜெனால் என்ற பொருள் உள்ளது. அதேசமயம் அசிடைல், யூஜெனோல், வெண்ணிலின், டானின்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் போன்ற எண்ணெய் பொருட்களும் அடங்கியுள்ளன.
இந்த கிராம்பு எண்ணெய் பற்பசை தயாரிப்பிலும், பல் சிகிச்சைக்கும், மயக்க மருந்திலும் , சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை வெளியேற்றவும் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரையின் அளவை சீராக்க கிராம்பு :
இன்றைய இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள் ஏராளம். இது ஒரு வளர்சிதை மாற்றக் காரணியால் ஏற்படும் பிரச்சினை என்பது நமக்குத் தெரியும்.
ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் அதற்கு அடிப்படையான விஷயமே கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தச் செய்வது தான். அதை உணவில் மூலம் தான் சிறப்பாக செயல்படச் செய்ய முடியும். அதில் கிராம்புக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.
சர்க்கரை நோயாளிகள் கிராம்பை தினமும் உட்கொண்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்பட்டு இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் கிராம்பின் எண்ணெய் கூட இன்சுலின் அளவை பராமரிக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கிராம்பு :
கிராம்பில் உள்ள வைட்டமின் சி உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய காலக்கட்டத்தில் இதனை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பல் பிரச்சனைகளை தீர்க்க கிராம்பு :
கிராம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்வதோடு, பற்களில் ஏற்படும் வலியையும் குறைக்கிறது.
எனவே பல் வலி, ஈறுகளில் வலி இருந்தால் அந்த இடத்தில் கிராம்பு வைப்பது சிறந்தது. அதேபோல் வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் கிராம்பை எடுத்துக் கொள்ளலாம். கிராம்பை பொடி செய்து, அதை சிறிதளவு எடுத்து வாய் கொப்பளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.
கல்லீரல் ஆரோக்கியத்துக்கு கிராம்பு :
கிராம்பில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்கள் இருப்பதால் அவை கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது.
இதனால் கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறுகின்றன. இதில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கல்லீரலை சுத்தம் செய்வதோடு. கல்லீரலில் படியும் கொழுப்புக்களையும் குறைத்து கொழுப்பு கல்லீரல் பிரச்சினையை தீர்க்க உதவியாக இருக்கிறது.
வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையை சரிசெய்ய :
காலையில் கிராம்பை உட்கொள்வதால் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறது.
இதனால் வயிற்று போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
செரிமானத்தை இலகுவாக்குவதால் வயிறு மந்தம். வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகளையும் சரிசெய்ய முடியும்.
எடை இழப்புக்கு உதவும் கிராம்பு :
கிராம்பில் உள்ள சாறு அதிக கொழுப்பின் காரணமாக உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
கிராம்பை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்பை குறைக்க முடியும்.
நம்முடைய உடல் எடை மற்றும் கல்லீரல் கொழுப்பைக் குறைக்க முடியும். இதனால் உடல் எடை இழப்பில் கிராம்பு மிக முக்கிய பங்காற்றுகிறது.
எலும்புகளின் வலிமைக்கு கிராம்பு :
கிராம்பில் உள்ள ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் ஆகியவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
நம்முடைய தினசரி உணவில் கிராம்பை சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்வதோடு, மூட்டு வலி ஆகியவற்றைக் குறைக்கச் செய்யும்.
அற்புதங்கள் நிறைந்த கிராம்பு :
கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
தலைவலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. இதற்காக ஒரு கிளாஸ் பாலுடன் கிராம்பு தூள் கலந்து குடிக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெய்யை நுகர்ந்தால் கூட நிவாரணம் கிடைக்கும்.
இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் நுரையீரல், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
கிராம்பு சுவாசக் குழாயில் உண்டாகும் அழுத்தத்தை தணித்து பாக்டீரியாக்கள் நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.
யாரெல்லாம் கிராம்பு சாப்பிட கூடாது?
கிராம்பு அழற்சி இருப்பவர்கள் இதனை பயன்படுத்தக் கூடாது. இவர்கள் கிராம்பு சாப்பிடுவது அல்லது அதன் எண்ணெய்யை சருமத்தில் தடவுவது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
கல்லீரல் நோய் ஹீமோபிலியா போன்ற இரத்தப்போக்கு அல்லது இரத்தம் உறைதல், நோயெதிப்பு சக்தி பலவீனம் அடைதல் அல்லது உணவு அழற்சி இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.
அதேபோல் கிராம்பு மாத்திரை க்ரீம் ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள். இது அளவு அதிகமாக்கி பாதிப்பை உண்டாக்கும்.
கிராம்பை எப்படி சாப்பிடலாம்?
கிராம்பை அப்படியே வெறும் வாயில் போட்டு லேசாக கடித்து, அப்படியே வாயில் அடக்கி வைத்துக் கொண்டு, அப்படியே அதன் உமிழ்நீரை விழுங்கிக் கொள்ளலாம். இதுதான் கிராம்பு சாப்பிட மிகச்சிறந்த வழி.
கிராம்பை வெறும் வாயில் சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். கிராம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போல தேன் கலந்தும் குடிக்கலாம். அப்படி தினமும் 2 கிராம்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்கினால் ஆரோக்கியமாக அமையும். குழந்தைகளுக்கு உணவு வழியாக கிராம்பை சேர்க்கலாம்.
கிராம்பை எப்போது சாப்பிட வேண்டும்?
கிராம்பை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.. ஆனால் படுக்கைக்கு முன் அவற்றை உட்கொள்வது இரட்டிப்பு பலனை அளிக்கிறது.
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் 2 கிராம்பை மென்று சாப்பிட வேண்டும்.
பின் ஒரு கிளாஸ் சூடான நீரைக் குடிக்கவும். இதனால் இரைப்பை பிரச்சினைகள், வயிற்றுப் பிடிப்புகள், முதுகுவலி போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
01) "நங்சிவாயநம" - திருமணம் நிறைவேறும்.
(02) "அங்சிவாயநம" - தேக நோய் நீங்கும், ஆயுள் வளரும், விருத்தியாகம்.
(03) "வங்சிவாயநம" - யோக சித்திகள் பெறலாம்.
(04) "ஓம்அங்சிவாய" - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
(05) "கிலிநமசிவாய" - வசிய சக்திகள் வந்தடையும்
(06) "ஹிரீநமசிவாய" - விரும்பியது நிறைவேறும்
(07)"ஐயும்நமசிவாய" -புத்தி வித்தை மேம்படும்.
(08) "நமசிவாய" - பேரருள், அமுதம் கிட்டும்.
(09) "உங்யுநமசிவாய" - வியாதிகள் விலகும்
(10) "கிலியுநமசிவாய" - நாடியது சித்திக்கும்.
(11) "சிங்வங்நமசிவாய" - கடன்கள் தீரும்.
(12) "நமசிவாயவங்" - பூமி கிடைக்கும்.
(13) "சவ்வுஞ்சிவாய" - சந்தான பாக்யம் ஏற்படும்.
(14) "சிங்றீங்" - வேதானந்த ஞானியாவார்
(15) "உங்றீம்" - ரிஷிகள் ஆவார்.
(16) "சிவாயநம" - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
(17) "அங்நங் சிவாய" - தேக வளம் ஏற்படும்
(18) "அவ்வுஞ் சிவாயநம" - சிவ தரிசனம் காணலாம்
(19)"ஓம் நமசிவாய" - காலனை வெல்லலாம்.
(20) "லங்ஸ்ரீறியுங் நமசிவாய" - விளைச்சல் மேம்படும்.
(21) "ஓம் நமசிவாய" - வாணிபங்கள் மேன்மையுறும்.
(22) "ஓம் அங்உங்சிவாயநம" - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
(23) "ஓம் ஸ்ரீறியும் சிவாயநம" - அரச போகங்கள் கிடைக்கும்.
(24) "ஓம் நமசிவாய" - சிரரோகம் நீங்கும்.
(25) "ஓங் அங்சிவாய நம" - அக்னி குளிர்ச்சியைத் தரும்.
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ ஜெபம் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் பக்தி, சிரத்தைக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவேற்றி ஜெபிக்க வேண்டும். மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு மற்றும் சில யோக பயிற்சிகள் முக்கியம்.....
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். மேல்நிலை கல்வியில் ஆர்வமின்மை உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொழுது போக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
பேச்சுக்கு மதிப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை விலகும். சமூக பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். சேவை நிமித்தமான செயல்பாடுகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தனவரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். வியாபாரம் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் மறைமுகமான செயல்பாடுகள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வரவுகளில் இருந்த இழுபறிகள் மறையும். உயர்நிலை கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
அலுவல் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கடன் விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஈடுபாடு ஏற்படும். இழுபறியாக இருந்த பணிகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளில் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியம் கைகூடிவரும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். கமிஷன் சார்ந்த வியாபார பணிகளில் லாபமடைவீர்கள். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
பழைய அனுபவங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். மனை விற்பனையில் ஏற்ற இறக்கமான சுழல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் அலைச்சல்கள் மேம்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தனை போக்கில் சில மாற்றம் உண்டாகும். உணர்ச்சிவசமான பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். மறதி பிரச்சனைகளால் தாமதம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக தொடர்பான பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மீனம்
சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் துரிதம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை 8.1.2026.
இன்று காலை 11.23 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி
இன்று மாலை 05.06 வரை பூரம். பின்னர் உத்திரம்.
இன்று இரவு 10.02 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.
இன்று காலை 11.23 வரை தைத்தூலம். பின்னர் இரவு 11.33 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று காலை 6 31 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 05.06 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
நாம் கோயிலுக்குப் போவது என்பது ஏதோ ஒரு சடங்கு கிடையாது. அது நமது முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற ஒரு "உயிரியல் மென்பொருள்" (Biological Software) மாற்றும் கலை. "உடம்பே ஆலயம்" என்று சும்மாவா சொன்னார்கள்? ஒரு கோயிலின் ஒவ்வொரு கல்லும், தூணும் உங்கள் உடலின் ஒரு உறுப்பைத்தான் குறிக்கிறது.
(1) ஆலயம்:
"ஆலயம்" என்ற சொல்லிலேயே அதன் ரகசியம் இருக்கிறது.
ஆ = இது சிவம், விந்து மற்றும் சந்திரகலையைக் குறிக்கும். அதாவது உங்கள் உடலைத் தூய்மைப்படுத்தும் குளிர்ச்சியான ஆற்றல்.
லயம் = இது அந்த ஆற்றலை சக்தியோடும் நாதத்தோடும் (பிராணனோடும்) இணைக்கும் இடம். நமது மூளையின் நடுப்பகுதியில் (3rd Ventricle) இந்த இரண்டு ஆற்றல்களும் சேரும்போதுதான் ஒரு மனிதனுக்குள் பேரொளி பிறக்கிறது. இதுதான் உண்மையான "லயம்"
(2) கோபுரமும் உங்கள் நரம்புகளும்
கோவிலின் கோபுர வாசலைப் பார்க்கும்போதே உங்கள் உடலில் மாற்றங்கள் தொடங்குகின்றன.
5 நிலைகள்: உங்கள் ஐம்புலன்களைக் குறிக்கிறது.
9 நிலைகள்: உங்கள் உடலின் 9 துவாரங்களைக் குறிக்கிறது.
11 நிலைகள்: 9 துவாரங்கள் + இதயக் குகை + சுழிமுனைத் துவாரம். வாசலில் இருந்தே உங்கள் கவனத்தை மெல்ல மெல்ல உள்ளே திருப்ப வேண்டும் என்பதே இதன் ரகசியம்.
(3) கொடிமரம்: உங்கள் முதுகெலும்பும் 36 தத்துவங்களும், கோயிலின் மிக முக்கியமான பகுதி கொடிமரம் (துவஜஸ்தம்பம்). இதுதான் உங்கள் உடலின் முதுகெலும்பு அல்லது சுழிமுனை நாடி.
அடிபாகம் (பார் - மண் தத்துவம்): இங்குதான் பொன்னும் நவரத்தினமும் இருக்கும். இது உங்கள் உடலின் 'விந்து' அல்லது "மூலாதார சக்தியைக்" குறிக்கிறது.
உச்சி (நாதம் - மணிகள்): இது உங்கள் 36-வது தத்துவமான நாதத்தைக் குறிக்கிறது. இது உங்கள் புருவ மத்தியில் தொடங்கி நெற்றி நடுவில் முடிகிறது.
கொடியேற்றம்: அடியில் இருக்கும் விந்து சக்தியை (செல்வம்) மூச்சுப் பயிற்சியால் மேலேற்றி உச்சிக்குக் கொண்டு செல்வதே 'கொடியேற்றம்'. அங்குதான் அந்த 'அனுமன்' (வாசி - மூச்சு) இருக்கிறார்.
(4) வாகனங்களும் உங்கள் மனமும்
சுவாமி ஊர்வலமாக வரும் வாகனங்கள் உங்கள் மனதின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கின்றன:
யானை: உங்கள் மூலாதார உறுதி.
குதிரை: நீங்கள் அடக்க வேண்டிய மூச்சுக்காற்று (அபானன்).
சிம்மம்: கோபம் எனும் மிருகக்குணம் (ருத்ர கிரந்தி).
இராவணன்: பல திசைகளில் சிதறும் உங்கள் பத்து தலை (மனம்).
தேர் (இரதம்): 9 பொருட்களால் ஆன உங்கள் உடல். ஆன்மா என்ற இறைவனைத் தேரில் ஏற்றி நீங்கள் தான் ஓட்ட வேண்டும்.
(5) திருவிழா: ஒரு முழுமையான யோகப் பயிற்சி, கொடியேற்றம் தொடங்கி தேரோட்டம் வரை நடக்கும் 10 நாள் திருவிழா என்பது, உங்கள் முதுகுத் தண்டு வழியாக சக்தியை மேலேற்றி (குண்டலினி), உங்கள் ஆன்மாவை ஜோதியாக மாற்றி (கார்த்திகை தீபம்), அந்த ஜோதியைத் தேரில் (உடலில்) அமர வைக்கும் ஒரு யோகப் பயிற்சி முறை.
(6) நடைமுறை வழிகாட்டி: கோயிலுக்குள் எப்படிச் செயல்பட வேண்டும்?
நுழையும்போது: வாசல்படியைத் தொட்டு வணங்கவும். இது உங்கள் இடது மூளையைச் செயல்பட வைத்து தர்க்கரீதியான கவனத்தைக் கொடுக்கும்.
கொடிமரம்: கொடிமரத்தின் பக்கவாட்டில் நின்று விழுந்து வணங்கவும். அங்குள்ள சங்கு, சக்கரம், அனுமனைத் தியானிக்கவும். அனுமன் என்றால் 'வாசி' (மூச்சு). அந்த மூச்சை மெல்ல மேலே உயர்த்தவும்.
கருவறை: அங்கு காட்டப்படும் கற்பூர ஒளி உங்கள் ஆன்ம ஒளியைக் குறிக்கிறது. தீர்த்தம் (அமுதம்) அருந்தும்போது, அது உங்கள் மூளைக்குள் சுரக்கும் சுரப்பிகளைத் தூண்டுகிறது.
திரும்பும்போது: தரிசனம் முடிந்து வெளியே வரும்போது கண்டிப்பாக வடக்குப் பார்த்து அமர வேண்டும். இது நீங்கள் பெற்ற அந்த உயர் அதிர்வெண் ஆற்றலை உங்கள் மூளைக்குள் "சேமிக்கும்" (Data Save) நேரமாகும்.
அகத்தைத் தேடுங்கள்!
புறத்திலே நடக்கும் சடங்குகளை மட்டும் பார்த்துவிட்டு வராமல், அகத்திலே உங்கள் சுழிமுனையைப் பிடியுங்கள். வெளியே பார்க்கும் தீபத்தை விட, உங்கள் சிரசின் உச்சியில் எரியும் 'தூண்டாமணி விளக்கை' (பரவொளி) காண முயற்சி செய்யுங்கள். அகத்தைப் பிடித்தால் தான் பிறவிப் பெருங்கடல் நீந்த முடியும்.
"கோவில் என்பது உங்கள் உடலே; கொடிமரம் உங்கள் முதுகெலும்பே; அங்கு எரியும் விளக்கு உங்கள் ஆன்மா!"
அடுத்த கட்டமாக, கோயிலில் நீங்கள் அமர்ந்து செய்யும் அந்த 5 நிமிட "டேட்டா சேவ்" (Data Save) தியானத்தை எப்படிச் செய்வது என்ற விளக்கம்
கோயில் தரிசனம் முடிந்து வெளியே வரும்போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய அந்த மிக முக்கியமான 5 நிமிட "டேட்டா சேவ்" (Data Save) தியான முறை இதோ. இது உங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, கருவறையில் நீங்கள் பெற்ற உயர் அதிர்வெண் ஆற்றலை (High-Frequency Energy) உங்கள் உடலில் நிலைநிறுத்த உதவும்.
கோயில் அமர்வு முறை: 5 நிமிட நரம்பியல் சேமிப்பு ப்ரோட்டோகால்
நோக்கம்: கருவறையின் காந்தப்புலம் மற்றும் பிரகாரத்தின் ஆற்றலை உங்கள் உடலில் "லாக்" (Lock) செய்தல்.
படி 1: திசை அறிதல் (Positioning)
திசை: வடக்கு நோக்கி அமரவும். வடக்கு திசை என்பது காந்த ஆற்றல் சீராக இருக்கும் திசை. இது உங்கள் உடலின் 'மெரு' தண்டினை (முதுகெலும்பை) பிரபஞ்சக் காந்தத்தோடு ஒத்திசைக்க உதவும்.
இடம்: கொடிமரத்திற்கும் கருவறைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஓரமாக அமரவும்.
படி 2: உடல் நிலை (Posture)
ஆசனம்: தரையில் சுகாசனத்தில் அமரவும். கைகளை முழங்கால்கள் மீது 'சின் முத்திரை' (பெருவிரலும் ஆள்காட்டி விரலும் தொட்டபடி) வைத்துக்கொள்ளவும்.
முதுகுத்தண்டு: உங்கள் 'துவஜஸ்தம்பமாகிய' முதுகெலும்பை நேராக நிமிர்த்தி வைக்கவும். அப்போதுதான் ஆற்றல் கீழிருந்து மேல் நோக்கித் தடையின்றிப் பாயும்.
படி 3: கண்களும் கவனமும் (The Internal Gaze)
கண்கள்: மெல்ல மூடிக்கொள்ளவும். இப்போது உங்கள் கவனம் உங்கள் புருவ மத்தியிற்கு (ஆக்ஞா சக்கரம்) வரட்டும்.
காட்சிப்படுத்துதல்: கருவறையில் நீங்கள் கண்ட அந்த 'கற்பூர ஒளி' அல்லது 'திருவுருவத்தை' உங்கள் புருவ மத்தியில் நிலைநிறுத்தவும். இது உங்கள் 12 ஆதித்யர்களை (Cranial Nerves) அந்த ஒளியுடன் இணைக்கும்.
படி 4: வாசி சுவாசம் (The Hanuman Sync)
இது ஒரு நிதானமான சுவாச முறை.
உள்மூச்சு: மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கும்போது, கொடிமரத்தின் அடியில் இருக்கும் ஆற்றல் (விந்து) முதுகெலும்பு வழியாக உச்சிக்கு ஏறுவதாக நினைக்கவும்.
கும்பகம் (நிறுத்துதல்): மூச்சை 3 வினாடிகள் உள்ளே நிறுத்தி, நெற்றி நடுவில் அழுத்தத்தைக் கொடுக்கவும். இதுதான் 'டேட்டா சேமிப்பு' நடக்கும் நேரம்.
வெளிமூச்சு: மெதுவாக மூச்சை வெளிவிடும்போது, அந்த அமைதி உங்கள் உடல் முழுவதும் பரவுவதை உணரவும்.
படி 5: அமுதச் சுரப்பு (The Amrita Absorption)
உங்கள் நாக்கை மடித்து மேல் அன்னத்தின் மென்மையான பகுதியில் லேசாகத் தொடவும் (கேசரி முத்திரை).
தரிசனத்தின் போது நீங்கள் பெற்ற அந்தப் பரவொளியானது, உங்கள் பினியல் சுரப்பியைத் தூண்டி, 'அமுதம்' எனும் அமைதி ஊக்கியைச் சுரக்கச் செய்யும். அதை அப்படியே முழு உடலும் அனுபவிக்கட்டும்.
முக்கியக் குறிப்பு: தவிர்க்க வேண்டியவை, அமர்ந்து எழுந்தவுடன் யாரிடமும் பேச வேண்டாம். அமைதியாகக் கோபுரத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரவும். பேச்சு ஆற்றலைச் சிதறடிக்கும். செல்போனைப் பார்க்க வேண்டாம். டிஜிட்டல் ஒளி உங்கள் மூளையில் சேமிக்கப்பட்ட ஆன்ம ஒளியை (Biophotons) அழித்துவிடும்.
இந்த 5 நிமிட அமர்வு என்பது உங்கள் மூளையின் Default Mode Network (DMN) ஐ தற்காலிகமாக நிறுத்தி, உங்களை ஒரு 'நடமாடும் கோயிலாக' (Living Chariot) மாற்றும் செயலாகும். நீங்கள் அமர்ந்து எழும்போது, நீங்கள் தரிசனம் செய்த அந்த இறைவன் உங்களது இதயக் குகைக்குள் குடியேறிவிடுவார்.
"வெளியே பார்த்தது தரிசனம்; உள்ளே அமர்ந்து உணர்வதே முக்தி."
நீங்கள் அடுத்த முறை கோயிலுக்குச் செல்லும்போது இந்த முறையைப் பின்பற்றி, உங்கள் உடலில் ஏற்படும் அந்த அமைதியான அதிர்வை உணருங்கள்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் (ஜன.9) தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது
இந்த வழக்கை இன்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை வாரியத்தின் சார்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.
தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும். இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர். சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது. இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயகன் படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பெரும்பான்மை உறுப்பினர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்” என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதி பி.டி.ஆஷா, “ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது, அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல. படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் (ஜன.9) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். ஜனநாயகன் படம் ஜன.9-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையோ அல்லது நாளை மறுதினம் காலையோ தீர்ப்பும் வெளியாகும் எனத் தெரிவதால், இப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.















