டி20 2024 உலக கிண்ணம் - பிலிப் சால்டின் அதிரடி - மேற்கிந்தியதீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து!
டி20 2024 உலக கிண்ண தொடருக்கான சூப்பர் 8 சுற்று மிகவும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.
20 அணிகள் பங்குகொண்ட முதல் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் 2ஆம் சுற்றுக்கு தெரிவான 8 அணிகள் தற்போது பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதன் அடிப்படையில் இன்று இடம்பெற்ற சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது போட்டியில் நடப்பு சம்பியனான இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளை 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 20ஓவர் நிறைவில் 4 விக்கட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மேற்கிந்தியதீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக ஜோர்சன் சார்லஸ் 38 ஓட்டங்களையும், ரௌமன் பவல் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து 181 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சால்ட், மற்றும் பட்லரின் இணைப்பாட்டம் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது.
22 பந்துகளை சந்தித்த பட்லர் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அதன் பின்னர் சால்ட் மற்றும் ப்ரஸ்ட்ரோ ஜோடி அணிய வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றது.
17.3 ஓவர்களில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து இங்கிலாந்து அணி வெற்றியிலக்கை கடந்தது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் ரசல் மற்றும், ரோஸ்ட்ரான் சார்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000