நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றி
ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெற்றிருந்தது.
அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதற்கமைய இலங்கை அணி இந்த போட்டியில் 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது
இதனிடையே
இலங்கை T20 கிரிக்கட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தனது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வெற்றிடமாகும் T20 அணியின் தலைமைப் பொறுப்பு தற்போது ஒரு நாள் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் குசல் மெண்டிஸுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியாவுடனான போட்டித் தொடரில் தலைமைப் பதவி மாற்றம் மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வூட்டும் தனது பதவியில் நீடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியதன் பின்னர் அவரது ஒப்பந்தம் முடிவுக்குகொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட்டின் முக்கிய பொறுப்பு சனத் ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
000