சினிமா செய்திகள்
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
Ads
 ·   ·  1421 news
  •  ·  0 friends
  • 1 followers

தொடர் தோல்விகளின் எதிரொலி - இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அமைச்சர் அலி சப்ரி அழைப்பு

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை முன்னெப்போதையும் விட வலுவாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்றுவதற்கு நாம் ஒன்றுபட்டு தீர்க்கமாகச் செயல்படுவோம்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய விளையாட்டுச் சட்டம், அரசியலமைப்புடன் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

2024 டி 20 உலகக் கிண்ணமானது அமெரிக்காவில் ஆரம்பமாகி தற்சமயம் நடைபெற்று வருகிறது.

இதில் இரண்டு போட்டிகளை மாத்திரம் எதிர்கொண்ட இலங்கை அணி, அந்த இரு போட்டிகளிலும் படுதோல்வியை தழுவியுள்ளதுடன், மோசமான செயல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.

நியூயோர்க்கில் ஜூன் 3 அன்று நடைபெற்ற தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் 77 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதேநேரம் இன்று டல்லாஸில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்களாதேஷிடம் 2 விக்கெட்டுகளினால் வீழ்ந்தது.

அது மாத்திரமல்லாது டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதான நெதர்லாந்துடனான பயிற்சி ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது. இவ்வாறான நிலையிலேயே அமைச்சர் அலி சப்ரி, தனது எக்ஸ் தளத்தில் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

அதில் அது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர்,

கிரிக்கெட் என்பது இலங்கையின் இதயத்துடிப்பாகும், இது நமது தேசத்திற்கு புன்னகையையும், பெருமையையும், ஒற்றுமையையும் கொண்டு வந்த ஒரு விளையாட்டாகும்.

எங்களது வெற்றிகள், குறிப்பாக உலகக் கிண்ண வெற்றி, அனைத்து இலங்கையர்களின் இதயங்களிலும் மறக்க முடியாத நினைவுகளை பதித்துள்ளது.

எனினும் கூட இன்று, நமது நேசத்துக்குரிய விளையாட்டு நெருக்கடியில் உள்ளது, ஒரு அவசர மற்றும் விரிவான மறுசீரமைப்புக்கு அழைப்பு விடுக்கும் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

2023 ஐசிசி உலகக் கிண்ணம் மற்றும் ஐசிசி டி20 ஆகியவற்றில் சமீபத்திய ஏமாற்றங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல. அவை நமது கிரிக்கெட் உள்கட்டமைப்பிற்குள் ஆழமாக வேரூன்றியிருக்கும் பிரச்சினைகளின் அப்பட்டமான எடுத்துக்காட்டு.

இந்தச் சிக்கல்களைத் தற்காலிகத் திருத்தங்களால் தீர்க்க முடியாது. நமது கிரிக்கெட்டை தனிப்பட்ட நிறுவனமாக மாற்றியவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் துணிச்சலான, தொழில்முறை அணுகுமுறைதான் நமக்குத் தேவை.

நமது கிரிக்கெட்டின் நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் என்ற வகையில், சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவையை என்னால் சான்றளிக்க முடியும்.

மேலும் புதிய சட்டத்தின் மூலம் இந்த முக்கியமான மாற்றங்களைச் செயல்படுத்தும் விளிம்பில் இப்போது இருக்கிறோம். இலங்கை கிரிக்கெட்டுக்கு இது ஒரு தீர்க்கமான தருணம்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய விளையாட்டுச் சட்டம் மற்றும் அரசியலமைப்புடன் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும்.

இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டோ வியாபாரமோ அல்ல; இது நமது தேசிய உணர்வின் பிரதிபலிப்பாகும். நமது வெற்றியை நிதி அளவீடுகளால் அளக்காமல், களத்தில் நாம் அடையும் வெற்றிகள் மற்றும் நம் மக்களிடம் உள்ள நம்பிக்கையை வைத்து அளவிட வேண்டும்.

தற்போது, எங்களின் செயல்திறன் ஏற்கத்தக்கதாக இல்லை, மாற்றத்திற்கான நேரம் இப்போது வந்துவிட்டது எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 564
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads