Category:
Created:
Updated:
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில் 78 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தமை குறிப்பிடத்தக்கது.
000