அமெரிக்கா மிரட்டல் – அதிரடி காட்டும் இந்தியா!
ஈரானுடன் பொருளாதார உறவில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நல்லுறவு உள்ளது, ஈரானின் சர் துறைமுகத்தை பராமரிப்பது தொடர்பாக ஈரானுடன் 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் இந்திய அரசு சமீபத்தில் கையெழுத்திட்டது
இது அமெரிக்காவின் அதிருப்திக்கு காரணமாக இருந்ததால், ஈரானுடன் உறவில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள திட்டமானது முழு பிராந்தியத்திற்கும் நன்மைகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
எனவே, அந்த திட்டம் தொடர்பில் குறுகிய கருத்துகளை கொண்டிருக்க வேண்டாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
000