இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் - வெளியானது பயிற்சிப் போட்டிக்கான அட்டவணை
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அதன்படி போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்கவுள்ளதுடன், நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடன் மோதவுள்ளது.
இந்த பயிற்சி போட்டிகள் மே 27 முதல் ஜூன் 1 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கை தனது முதல் பயிற்சி போட்டி மே 28 அன்று நெதர்லாந்து அணியுடன் விளையாட உள்ளது.
அந்த பயிற்சி போட்டிற்கு பிறகு இலங்கை வீரர்கள் அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியில் விளையாட உள்ளனர், அந்த போட்டி மே 30ம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் முதல் போட்டியை ஜூன் 02ஆம் திகதி விளையாடவுள்ளதுடன், இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி தென்னாபிரிக்காவுடன் ஜூன் 03ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000