
மீண்டும் சுரக்ஷா காப்புறுதி திட்டம்
சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்பதாக 2017 ஆம் ஆண்டில் ஆரம்பமான காப்புறுதிட்டம் 2022 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
நாட்டின் குழந்தைகளைப் பற்றி சிந்தித்து சுகாதாரக் காப்புறுதியை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்த அவர் பாடசாலை செல்லும் மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சுரக்ஷா காப்புறுதி திட்டம் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர் -
“அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் காப்புறுதியில் நிபுணத்துவம் பெற்ற இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனம் காப்புறுதி திட்டத்திற்கு பங்களிக்க உள்ளது.
இந்த காப்புறுதியின் கீழ் அரச அல்லது தனியார் வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவதற்கு மூன்று இலட்சம் ரூபா வரையிலும், வெளிநோயாளர் சிகிச்சைக்கு இருபதாயிரம் ரூபா வரையிலும், தீவிர சிகிச்சைக்கு 15 இலட்சம் ரூபா வரையிலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், மற்றும் விசேட பாடசாலை மாணவர்கள் இந்த காப்புறுதியை பெற உரித்துடையவர்கள்” என ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000