
ஆயுத உற்பத்திப் பிரிவு ஒன்றை அமைப்பது தொடர்பாக இலங்கை இந்தியாவுடன் பேச்சு - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார
ஆயுத உற்பத்திப் பிரிவு ஒன்றை அமைப்பது தொடர்பாக இலங்கை தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய ஆயுதங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ள இலங்கை இராணுவத்தினை, உற்பத்தித் துறையை நோக்கி நகர்த்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் ஏற்கனவே சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது. அத்துடன் இந்திய இராணுவத்துடன் நாம் தொடர்பில் உள்ளோம்.
இந்த நிலையில் இந்திய இராணுவத்துடன் இணைந்து ஆயுதங்களை உற்பத்தி செய்யும் போது பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்யலாம். இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரம் இந்தியாவிடமிருந்து எந்தவொரு ஆயுதங்களையும் இலங்கை கொள்வனவு செய்ய முயற்சிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000